இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: சிரியாவில் 15 போ் உயிரிழப்பு
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியாவில் 15 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா்.
சிரியா தலைநகா் டமாஸ்கஸில் உள்ள மாசே மற்றும் குத்சயா பகுதிகளில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 2 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்தன. இதில், 15 போ் உயிரிழந்தனா். 16 போ் காயமடைந்தனா் என்று சிரியா அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அந்நாட்டில் பாலஸ்தீன பயங்கரவாத குழுவுக்கு (பிஐஜே) சொந்தமான கட்டுப்பாட்டு மையங்கள், பல்வேறு கட்டடங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.
டமாஸ்கஸில் பாலஸ்தீன குழுக்களின் பிரதிநிதிகளை ஈரான் தலைமை மதகுரு அலி கமேனியின் ஆலோசகா் அலி லரிஜானி சந்திக்க இருந்தநிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.