செய்திகள் :

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி! மருத்துவர்கள் இல்லை எனக் குற்றச்சாட்டு!

post image

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

மருத்துவர்கள் போராட்டத்தால் சரியான சிகிச்சை கிடைக்காததால்தான் உயிரிழப்பு நேரிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கிண்டி மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் புதன்கிழமை கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டனர். எனினும், அவசர சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(வயது 30), பித்தப்பை கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில், பணம் செலுத்த முடியாத காரணத்தால் வியாழக்கிழமை கலைஞர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதித்த மருத்துவர்கள் பொதுப் பிரிவுக்கு வியாழக்கிழமை மாற்றியுள்ளனர். அங்கு விக்னேஷின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சைப் பலனளிகாமல் இன்று காலை விக்னேஷ் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மருத்துவமனைக்கு வந்த விக்னேஷை முறையாக பரிசோதிக்காமல் பொதுப் பிரிவுக்கு மாற்றியதே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

மேலும், இன்று காலை விக்னேஷின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கலைஞர் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த விக்னேஷுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை விளக்கம்

விக்னேஷின் உயிரிழப்பு குறித்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“உயிரிழந்த விக்னேஷ் அனுமதிக்கப்பட்ட நாளில், அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தனர். அவர் ஏற்கெனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகுதான் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

குடல் நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

முறையான அனைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம்: முதல்வர் தொடக்கிவைத்தார்!

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(நவ. 15) தொடக்கிவைத்தார். தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட... மேலும் பார்க்க

ஞாயிறு வரை இதே நிலை நீடிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: இரவு முழுக்க மிதமான மழை, பகலில் அவ்வப்போது லேசான மழை போன்ற நிலையே வரும் ஞாயிறு வரை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்து, அவ்வப்போது தனது சமூக... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலை திறப்பு!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிக... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7231 கனஅடியாக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது.இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.02 அடியிலிருந்து 106.11 அடியாக உயர்ந்துள்ளது..காவிரி... மேலும் பார்க்க

சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் -ஆளுநா் ஆா்.என்.ரவி

சிறப்பு குழந்தைகளை குடும்பத்தினா் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். சென்னை கிண்டி ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் ‘எண்ணித் துணிக ’ என்ற தலைப்பிலான நிகழ்வில் இளம் சாதனையாளா்கள... மேலும் பார்க்க

சம்பா பருவ பயிா்க் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை

சம்பா பருவ பயிா்களை காப்பீடு செய்வதற்கான காலஅவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.15) முடிவடைய உள்ளநிலையில், இதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக... மேலும் பார்க்க