மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7231 கனஅடியாக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.02 அடியிலிருந்து 106.11 அடியாக உயர்ந்துள்ளது..
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5024 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7236 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 72.98 டிஎம்சியாக உள்ளது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அன்னிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.