செய்திகள் :

சீனாவில் வெளியாகும் மகாராஜா!

post image

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 (20 மில்லியன்) கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இதையும் படிக்க : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

மகாராஜா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், நடிகர் அமீர் கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகின்ற 29ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்தப் படத்தை அலிபாபா குழுமம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுக்கு நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டுதிருமணம்நடைபெ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: மெஸ்ஸி, வினிசியஸ் ஜூனியருக்கு அதிர்ச்சி..!

2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி பராகுவே அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 2-1 என பராகுவே அணி வென்றது. இதுவரை நடந்த போட்டிகளில் ஆர்ஜென்டினா 60 மு... மேலும் பார்க்க

தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.மேஷம்:இன்று தானதர்மம் செய்யவும். ஆன்மிக பணி களில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்... மேலும் பார்க்க

இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது. தற்போதைய நிலையில் இத்தொடரில் 2-1 என முன்னிலையில் இருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்... மேலும் பார்க்க

தீபிகா ‘ஹை ஃபை’: தாய்லாந்தை திணறடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது. இளம் வீராங்கனை தீபிகா 5 கோல்கள் அடித்து அசத்தினாா். போட்டியில் தொடா்ந்து 3 வெற்றிகளைப் பதிவு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு 95 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரயில்வேஸுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது. ஷாருக் கான், ஆண்ட்ரே சித்தாா்த், கேப்டன் நாராயண் ஜெகதீசன்... மேலும் பார்க்க