Super Singer Junior 10: நாளை சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஆரம்பம்; நடுவர்கள் யார் ...
தில்லியில் 3-வது நாளாக 'கடுமை' பிரிவில் காற்றின் தரம்!
தில்லியில் தொடர்ந்து 3-வது நாளாக காற்றின் தரம் 'கடுமை' பிரிவில் உள்ளது.
தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்குச் சென்றது. இதனால் காற்று மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருகின்றது.
இருப்பினும் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து 3-வது நாளாக காற்றின் தரம் இன்று(வெள்ளிக்கிழமை) 'கடுமை' பிரிவில் இருக்கிறது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி, தில்லியில் காற்றின் தரக் குறியீடு(AQI) 420 ஆகப் பதிவாகியுள்ளது. தில்லியில் பெரும்பாலான பகுதிகளில் புகைமூட்டமாகக் காணப்படுகிறது.
இன்று அதிகாலை காற்றின் தரக் குறியீடு 441 ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் மோசமான காற்று மாசினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசினைக் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார். மேலும் காற்று மாசுக்கான கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
வாகனங்களின் உமிழ்வு, அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது உள்ளிட்டவற்றால் தில்லியில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.
பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரமாக தில்லி உள்ளது குறிப்பிடத்தக்கது.