செய்திகள் :

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

post image

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகின்றன. இவ்விரு அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி டேரன் சமி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோமன் பவல் 54 ரன்கள்(3 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசினார். அவரைத் தொடர்ந்து ரோமாரியோ 30 ரன்களும், அல்ஜாரி ஜோசப் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி, ஷாகிப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர், 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் வென்றது.

இங்கிலாந்து அணியில் சாம் கர்ரன் 41 ரன்களும், லியம் லிவிங்ஸ்டன் 39 ரன்களும், வில் ஜாக்ஸ் 32 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் அகேல் ஹொசைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்தின் ஷகிப் மமூத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இவ்விரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி வருகிற நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள்: மேக்ஸ்வெல் புதிய சாதனை!

அனைத்துவிதமான, டி20 போட்டிகளையும் சேர்த்து அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், ... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிம் சௌதி!

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளரும், அந்த அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்... மேலும் பார்க்க

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி கூறியதென்ன?

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில மாதங்களாக... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட்டை பாதுகாப்பான கைகளில் ஒப்படைத்த ரோஹித், விராட்; முன்னாள் வீரர் பதிவு!

டி20 போட்டிகளில் இளம் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதை நினைத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.டி20 உ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால்..? ரூ.500 கோடி இழப்பைச் சந்திக்கும் பிசிபி!

சாம்பியன்ஸ் டிராபி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான இழப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று ... மேலும் பார்க்க

இலங்கை, பாகிஸ்தான் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் இல... மேலும் பார்க்க