செய்திகள் :

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிம் சௌதி!

post image

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளரும், அந்த அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனுமான டிம் சௌதி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். நியூசிலாந்துக்காக 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் டிம் சௌதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மார்ச்சில் தனது 19 வயதில் டிம் சௌதி இங்கிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் நடந்த டி20 போட்டியில் அறிமுகமானார்.  நேப்பியரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 77* ரன்களும் விளாசினார்.

இவர் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் 385 விக்கெட்டுகளையும், 161 ஒருநாள் போட்டிகளில் 221 விக்கெட்டுகளையும், 125 டி20 போட்டிகளில் 164 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து அணி 0-2 என்ற கணக்கில் தோற்றதால் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.

35 வயதான டிம் சௌதி 385 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்துக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் ரிச்சர்டு ஹார்ட்லி உள்ளார்.

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நவம்பர் 28 ஆம் தேதியும், 2-வது போட்டி வெல்லிங்டனில் டிசம்பர் 6-ஆம் தேதியும், 3-வது போட்டி ஹாமில்டனில் டிசம்பர் 14 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள்: மேக்ஸ்வெல் புதிய சாதனை!

அனைத்துவிதமான, டி20 போட்டிகளையும் சேர்த்து அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது.இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகின்றன. இவ்விரு அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி டேரன் சமி ம... மேலும் பார்க்க

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி கூறியதென்ன?

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில மாதங்களாக... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட்டை பாதுகாப்பான கைகளில் ஒப்படைத்த ரோஹித், விராட்; முன்னாள் வீரர் பதிவு!

டி20 போட்டிகளில் இளம் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதை நினைத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.டி20 உ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால்..? ரூ.500 கோடி இழப்பைச் சந்திக்கும் பிசிபி!

சாம்பியன்ஸ் டிராபி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான இழப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று ... மேலும் பார்க்க

இலங்கை, பாகிஸ்தான் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் இல... மேலும் பார்க்க