`விஜய் போலதான் நானும்... 'உச்ச நடிகராக' இருக்கும்போது அரசியலுக்கு வந்தேன்' - சரத...
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை
மகாராஷ்டிரத்தில் பிரசாரத்துக்கு சென்றபோது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறவுள்ளது.
தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு!
சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்காமல் எதிா்க்கட்சித் தலைவா்களைக் குறிவைத்து தோ்தல் ஆணையம் செயல்படுவதாக காங்கிரஸ், சிவசேனை(உத்தவ் அணி) உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம, ஹிங்கோலி தொகுதியில் பிரசாரத்துக்கு சென்றபோது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இந்த விடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நியாயமான தேர்தலை பாஜக நம்புகிறது என்றும் தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.