செய்திகள் :

Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது விஜய் சேதுபதிதான்!' - ப்ரியா ராமன் ஓப்பன் டாக்

post image
`ஸ்கூல் - ஸ்டுடண்ட்ஸ் - ஸ்டாஃப்' என பிக் பாஸ் வீடு அதிரடி கலவரமாக போய்க் கொண்டிருக்கிறது.

ரஞ்சித்தும் தற்போது தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார். மற்ற போட்டியாளர்களும் ரஞ்சித்தின் மனநிலையை புரிந்துகொண்டனர். கடந்த வாரம் கதை சொல்லும் ஒரு டாஸ்கில் தனது மூத்த மகன் ஆதித்யா ஆட்டிசமில் பாதிக்கப்பட்டிருப்பதை கூறியிருந்தார். இந்த கதை அவர்மீதான மற்றவர்களின் பார்வையை மாற்றியிருக்கிறது. இது தொடர்பாகவும் பிக் பாஸ் வீட்டின் நடப்பு நிகழ்வுகள் குறித்தும் ரஞ்சித்தின் மனைவி ப்ரியா ராமனை சந்தித்தோம்.

தனது மகன் அதித்யா தொடர்பாக பேசிய அவர், "ஆட்டிசம்ல பாதிக்கப்பட்ட குழந்தைகளெல்லாம் இப்படிதான் இருப்பாங்கனு ஒரு பார்வை இருக்கு. அவங்க மீதான இந்த பார்வை எப்படி வந்ததுனு தெரில. சொல்லப்போனால், பாசத்துக்காகதான் அந்த குழந்தைகள் ரொம்பவே ஏங்குவாங்க. ஏதோவொரு தருணத்துல அந்த குழந்தைகளெல்லாம் நாம மற்றவர்கள் மாதிரி இல்லைனு உணர்ந்துகிறாங்க. அந்த விஷயம் அந்த குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்குது. அவங்க அந்த நேரத்துல தன்னம்பிக்கை இழந்துடுவாங்க. இந்த கொடூரமான சமூகம் அவங்களை கேலி பண்றாங்க. என்கிட்டையும் பலர் வந்து `ஏன் உங்களுடைய குழந்தைகளை வெளியில காட்டமாட்டேங்குறீங்க'னு கேட்டாங்க.

Priya Raman

அப்போ அவங்ககிட்ட நான் `இந்த சமுதாயம் எப்படி இருக்குனு பார்த்துட்டுதானே இருக்கீங்க. நான் ஏன் அவனை வெளியில காட்டணும். சில பேர் புரிஞ்சுகாமல் கிண்டல் பண்ணுவாங்க. சிலர் பாவம்னு நினைப்பாங்க. அந்த விஷயம் எனக்கும் வேண்டாம் ஆதித்யாவுக்கும் வேண்டாம். ஆதித்யா ரொம்ப சந்தோஷமாக இருக்கான். இப்போ ரஞ்சித்தும் ஆதித்யாவை மிஸ் பண்ணுவாரு. ஆதித்யாவும் அப்பாவை மிஸ் பண்றான். ரஞ்சித் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகுறதுக்கு முன்னாடி ஆதித்யாகிட்ட வீடியோ கால்ல பேசுற மாதிரி காணொளி பதிவு பண்ணிக் கொடுத்திட்டு போனார். ஆதித்யா ரஞ்சித்தை மிஸ் பண்ணும்போது வீடியோ கால் பேசுற மாதிரி நான் அந்த காணொளியை போட்டு காட்டுவேன்.

ஒரு சமயத்துல எங்களுடைய திட்டங்களை அவனும் கண்டுப்பிடிச்சிட்டான். நம்ம ரஞ்சித்தும் ஒரே வீட்டுக்குள்ளேயே வீடியோ ரெக்கார்ட் பண்ணினார். அது வெறும் காணொளிதான்னு அவன் கண்டிப்பிடிச்சு சிரிச்சான். முக்கியமாக ரஞ்சித்துக்கு பொறுமை அதிகமாக இருக்கும். அதித்யாவையும் இரண்டாவது மகனான ஆகாஷை கையாளும் விதத்திலேயே தெரியும். அவர் எப்போது என்கிட்ட எனக்கு மொத்தமாக மூணு குழந்தைகள் இருக்காங்க. அதுல முதல் குழந்தை நான்தான்னு அவர் சொல்வார்.

Priya Raman

நான் எல்லா விஷயங்களை ரொம்ப வேகமாக செஞ்சு முடிக்கணும்னு நினைப்பேன். ஆனா, அவர் மெதுவாக ஒரு விஷயத்தை பண்ணினாலும் அதுக்காக நூறு சதவீதம் உழைப்பை கொடுத்திடுவார். எனக்கு ரெண்டு பேருக்கு இடையில பரஸ்பரம் நல்ல புரிதல் இருக்கும்." என்றார்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்துக் கொண்டிருக்கும் நடப்பு நிகழ்வுகளை வைத்து பேச தொடங்கிய ப்ரியா ராமன், " இப்போ சமீபத்துல ரஞ்சித் ஜெஃப்ரி மாதிரி நடிச்சார். அசலாக அப்படிய் ஜெஃப்ரி மாதிரியே நடிச்சிருந்தார். இந்த உடம்புக்குள்ள ஜெஃப்ரி வந்தால் எப்படி இருக்கும்னு உள்வாங்கி அத்தனை விஷயங்களை ரஞ்சித் பண்ணினார். ரஞ்சித் ரொம்பவே உயரமான மனிதர். ஆனா, ஜெஃப்ரி மாதிரியே முழுவதுமாக மாறி பண்ணினது ஆச்சரியமாக இருந்தது. செளந்தர்யாவாக ஆனந்தி நடிச்சிருந்தாங்க.

Priya Raman

செளந்தர்யாவும் ஜெஃப்ரியும் பண்ணுகிற விஷயங்களை இவங்க ரெண்டு பேரு பண்ணீட்டு இருந்தாங்க." என்றவர், " சொல்லப்போனால் இப்போ ரொம்ப சேஃப் கேம் விஜய் சேதுபதிதான் விளையாடுறாரு. கடந்த வாரம் மொட்ட கடுதாசி யாருக்கு வேணும்னு கருத்துகள் கேட்டுட்டு இருந்தார். அவருக்குதான் மொட்ட கடுதாசி தேவைப்படுது. உண்மை அதுதான். அவர்தான் பெண்கள் அணிக்கு மொட்ட கடுதாசி போடுற மாதிரிதான் பண்றாரு. நான் அவரை ரசிக்கவும் செய்திருக்கிறேன். ஆனால், சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிதானே ஆகணும்." என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர்த்திகாவின் பதில்!

ஜீ தமிழ் சீரியலில்நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்த தொடர் `கார்த்திகை தீபம்'. தற்போது இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகை அர்த்திகாஇரண்டாம் ப... மேலும் பார்க்க

BB Tamil 8: பிக்பாஸ் பள்ளியாக மாறிய பிக்பாஸ் வீடு; தீபக் காலில் விழுந்த ஜாக்குலின்; நடந்தது என்ன?

பிக் பாஸ் சீசன் 8-ன் 39-வது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது பிக் பாஸ் வீடானது பிக் பாஸ் பள்ளி... மேலும் பார்க்க

ஸ்ரேயா - சித்து சீரியலில் நடந்த `இவருக்குப் பதில் இவர்' மாற்றம்... காரணம் இதுதானா?

ஜீ தமிழ் சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகத்தொடங்கிய சீரியல், 'வள்ளியின் வேலன்'. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடர் மூலம் ஜோடியாக அறிமுகமாகி, பிறகு காதலித்து நிஜ வாழ்க்கையிலும... மேலும் பார்க்க

BBTAMIL 8 DAY 38: டீச்சர்களுக்கு மாணவர்களின் மார்க்; சீக்ரெட் டாஸ்க்; அழுத மஞ்சுரியும், ஜாக்குலினும்

ரகசியத்தைப் பாதுகாத்து பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் ஏற்படுத்துவது திரைக்கதையின் வழக்கமான உத்தி. இன்னொரு வகையும் இருக்கிறது. அந்த ரகசியம் என்னவென்று பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால் கதாபாத்திரங்களு... மேலும் பார்க்க

Biggboss: "35 நாள்கள்; வாழ்க்கை பாடங்கள்" - பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதாவின் இன்ஸ்டா பதிவு

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐந்து வாரங்களைக் கடந்து இருக்கிறது.மொத்தம் 18 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் முதலில் ரவீந்திரன் வெளியேறினார். பிறகு அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இதனிடையே... மேலும் பார்க்க

BB Tamil 8: ஜாக்குலின் - சத்யா இடையே மோதல்; வர்ஷினியை ரவுண்ட் கட்டி அடித்த ஹவுஸ்மேட்ஸ் | Promo

பிக் பாஸ் சீசன் 8-ன் 38 வது நாளுக்கான முதல் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கின்றன.பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்றைய தினம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது பிக் பாஸ் வீடு பிக் ... மேலும் பார்க்க