எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர்த்திகாவின் பதில்!
ஜீ தமிழ் சீரியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்த தொடர் `கார்த்திகை தீபம்'. தற்போது இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகை அர்த்திகா இரண்டாம் பாகத்தில் இல்லை என்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தையும், கேள்வியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சிலர், கர்ப்பமாக இருப்பதால் அர்த்திகா நடிக்கவில்லை என்றும், ரொமான்ஸ் சீனில் நடிக்க முடியாதுங்கிறதனால அவர் தொடரில் இல்லை என்றும் வதந்திகளைப் பரப்ப அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அர்த்திகா வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில்,
"சீரியலில் நான் இறந்து போன மாதிரி காட்டின பிறகு நிறைய கேள்வி கேட்குறாங்க. சன் டிவி, விஜய் டிவியில் கமிட் ஆகிட்டாங்கன்னு சிலர் சொல்றாங்க, சிலர் பர்சனல் காரணங்களுக்காக விலகிட்டாங்கன்னு சொல்றாங்க இந்த வதந்தியை முதலில் நிறுத்தணும். அதுக்கு நான் பேசணும். அதனால தான் இந்த வீடியோ.
இந்த ரெண்டு வருட பயணத்துல கடைசியா நான் இறந்து போகிற மாதிரி எடுத்ததுதான் நான் ரொம்ப மனசு வலிச்சு நடிச்ச சீன். ஒவ்வொருத்தர்கிட்டேயும் நான் சொல்ற டயலாக்கை சும்மா படிக்கும்போதே எமோஷனல் ஆகிடுச்சு. நான் மட்டுமில்ல மொத்த டீமும் எமோஷனல் ஆகிட்டாங்க. அந்த சீன் எடுக்கிறதுக்கு ஒரு நாள் முன்னாடி ஒரு பாட்டு கொடுத்தாங்க. அந்தப் பாட்டோட வரிகள் எல்லாம் தீபாவோட இத்தனை நாள் டிராவல் பற்றி இருக்கும். அந்தப் பாட்டு கேட்க கேட்க ஒரு மாதிரி ஆகிடுச்சு. அன்னைக்கு நைட் எனக்கு தூக்கமே இல்ல. அதுவரைக்கும் டீம் விட்டுப் போறது அவ்ளோ இதுவா தெரியல ஆனா அன்னைக்குத்தான் அதெல்லாமும் தெரிஞ்சது. அந்த டீமை கண்டிப்பா மிஸ் பண்ணினேன்.
ஆல்ரெடி ஒரு மாசத்துக்கு முன்னாடி தீபா டிராக் பற்றி என்கிட்ட சொன்னப்ப தீபாவை சாகடிக்காதீங்க... கீதாவை சாகடிங்கன்னு சொன்னேன். அவங்க சேனலில் கேட்டு சொல்றதாக சொன்னாங்க. ஆனா, அவங்களுக்கு இந்த மாதிரி தான் டிராக் வேணும். அப்படிங்கிறப்ப நான் ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆக அவங்க சொல்றதை நடிச்சுதான் ஆகணும்.
சிலர் ரொமான்டிக் சீன் என்னால பண்ண முடியல அதனால தான் கேரக்டரை முடிச்சு விட்டுட்டாங்கன்னு சொல்றாங்க. நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். அப்படி இருக்கும்போது எனக்குன்னு கடமை இருக்கு. நான் அதெல்லாத்தையும் தெரிஞ்சுதான் இந்தத் துறைக்குள் வந்திருக்கேன். எனக்கு ரொமான்டிக் சீன் பண்றதுல எந்தப் பிரச்னையும் இல்ல. சார் என்னால அந்த சீன் பண்ண முடியாதுன்னுலாம் என்னால சொல்ல முடியாது. அவங்க சொல்றதை கேட்கணும். இந்த இன்டஸ்ட்ரி தான் எனக்கு சோறு போடுது.
அதே மாதிரி நான் கர்ப்பமா இருக்கேன்னும் சொல்லிட்டு இருக்காங்க. நான் மாசமாகும் போது நேரடியா உங்ககிட்ட சொல்லிடுறேன். சீரியலை விட்டு விலகுற அளவுக்கு எனக்கு எந்த ஹெல்த் இஷ்யூவும் இல்ல. உங்க எல்லாருடைய சப்போர்ட்னால தான் தீபா கேரக்டர் இந்த அளவுக்கு சக்சஸ் ஆகியிருக்கு. இன்னொரு புராஜக்ட் கமிட் ஆனா கண்டிப்பா உங்ககிட்ட சொல்றேன். தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!" எனக் கூறியிருந்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...