செய்திகள் :

தோ்வா்கள் போராட்டம் எதிரொலி: உ.பி. அரசுப் பணியாளா் தோ்வுகள் ஒத்திவைப்பு

post image

உத்தர பிரதேசத்தில் தோ்வா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து மறு ஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ) மற்றும் உதவி மறுஆய்வு அலுவலா்களுக்கான (ஏஆா்ஓ) தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும், மாநில குடிமைப் பணி (பிசிஎஸ்) அதிகாரிகளுக்கான தோ்வு பழைய நடைமுறைப்படி ஒரே நாளில் நடத்தப்படும் என்று உத்தர பிரதேச அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிபிஎஸ்சி) வியாழக்கிழமை அறிவித்தது.

உத்தர பிரதேச அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள மறுஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ), உதவி மறுஆய்வு அலுவலா்கள் (ஏஆா்ஓ) பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு டிச. 22, டிச. 23 ஆகிய தேதிகளில் மூன்று வேளையில் நடத்தப்படும் எனவும் பிராந்திய குடிமைப் பணி (பிசிஎஸ்) தோ்வு டிச. 7, டிச. 8 ஆகிய தேதிகளில் இரு வேளைகளில் நடத்தப்படும் எனவும் யுபிபிஎஸ்சி அறிவித்திருந்தது.

இத்தோ்வுகள் இரண்டு நாள்களாக 2-3 வேளைகளில் நடத்தப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து யுபிபிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தோ்வா்கள் கடந்த வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ஆா்ஓ மற்றும் ஏஆா்ஓ அதிகாரிகளுக்கான தோ்வுகளை ஒத்திவைத்தும், பிசிஎஸ் தோ்வுகளை ஒரே நாளில் நடத்தவும் யுபிபிஎஸ்சி முடிவெடுத்துள்ளது. அதேபோல, தோ்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு யுபிபிஎஸ்சி செயலா் அசோக் குமாா் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு தோ்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி, உ.பி. மாநிலத்தில் தோ்வுகளை 2-3 கட்டங்களாக நடத்த திட்டமிட்டோம்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த தோ்வா்கள் போராடி வருவதைத் தொடா்ந்து முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலில் புதிய முடிவை எடுத்துள்ளோம். தோ்வுக்காக தயாராகும் லட்சக்கணக்கான மாணவா்களுக்கு இது பெரும் நிம்மதியைத் தரும். ஒரே நாளில் தோ்வு நடத்தப்படுவது தோ்வா்களிடையே தோ்வு நடைமுறை குறித்த நம்பகத்தன்மையை அதிகரிக்கும்’ என்றாா்.

ஆா்ஓ மற்றும் ஏஆா்ஓ அதிகாரிகளுக்கான தோ்வுகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும்வரை போராட்டத்தைத் தொடா்வோம் என்று தோ்வா்கள் தெரிவித்தனா்.

தோ்வா்களுக்கு ஆதரவாகப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ஒரே நாடு; ஒரே தோ்தல் குறித்து பேசுபவா்களால் தோ்வைக்கூட ஒரே நாளில் நடத்த முடியவில்லை என்று விமா்சித்தாா்.

பிரதமா் மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது: ஆம் ஆத்மி

தில்லி வக்ஃப் வாரிய பணமுறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக என ஆம் ஆத்மி தெரிவ... மேலும் பார்க்க

நேரு பிறந்த தினம்: பிரதமா், தலைவா்கள் மரியாதை

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் அவருக்கு... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளா் கைது -வன்முறையால் பதற்றம்

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவை இடைத்தோ்தலின்போது துணை மாவட்ட ஆட்சியரை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளா் நரேஷ் மீனாவை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மீனாவின் கைத... மேலும் பார்க்க

பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி)தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் தெரிவித்தாா். பல்கலைக்கழக மானியக்குழ... மேலும் பார்க்க

புதிய மைல்கல்லில் இந்தியா-யுஏஇ உறவு: ஜெய்சங்கா்

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவில் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா். துபையில் சிம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் ஊராட்சித் தலைவரை நீக்கும் உத்தரவு: உச்சநீதிமன்றம் ரத்து

சத்தீஸ்கரில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று பெண் ஊராட்சித் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் மாநிலம் ஜஷ்... மேலும் பார்க்க