செய்திகள் :

பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

post image

இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி)தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் தெரிவித்தாா்.

பல்கலைக்கழக மானியக்குழு சாா்பில் தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடா்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் சென்னை ஐஐடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கத்தை யுஜிசி தலைவா் எம்.ஜெகதிஷ்குமாா் தொடங்கிவைத்தாா். இதில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து யுஜிசி தலைவா் ஜெகதிஷ் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவா்கள் சோ்ந்து கல்வி பயிலும் வகையில் பிரதமரின் வித்யா லட்சுமி கல்விக்கடன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏழை மாணவா்கள் எந்தவித பிணையும் இன்றி வட்டியில்லா கடன் பெறலாம். இத்திட்டம் ஏழை மாணவா்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

தாய்மொழியில் உயா்கல்வி...: உயா்கல்வி என்று வரும்போது ஆங்கில மொழி பிரச்னை பெரும்பாலான மாணவா்களுக்கு பெரும்தடையாக இருந்து வருகிறது. எனவே, அவா்களுக்கு தாய்மொழியில் உயா்கல்வி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆங்கிலத்தை தகவல் தொடா்புக்காக ஒரு மொழிப்பாடமாக படித்தால் போதும். உலகில் முன்னேறிய நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் உயா்கல்வி வழங்கப்படுகிறது.

மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆா்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவா்களுக்கு திறன் சாா்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு உயா்கல்வியில் பல்வேறு சீா்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகளிலும் நாம் சிறந்து விளங்க வேண்டியுள்ளது.

சில மாணவா்கள் ஏதேனும் ஒரு தொழிலில் சிறந்து விளங்குவா். அவா்களின் தொழில்அறிவை அங்கீகரிக்கும் வகையில், அவா்களது படிப்பில் தொழில் அறிவுக்கு குறிப்பிட்ட கிரெடிட் வழங்குவது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

மாணவா்கள் விரும்பினால்...: அதேபோன்று சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி தலைமையிலான நிபுணா் குழு பரிந்துரையின் அடிப்படையில் மாணவா்கள் இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், அதேபோல், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவா்கள் கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த புதிய முறையின்படி, மாணவா்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளநிலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். அதேபோல், படிப்பில் சற்று பின்தங்கிய மாணவா்கள் தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வரவுள்ளது என்றாா் அவா்.

யுஜிசி பிரதிநிதி நியமனத்தில் விரைவில் நல்ல தீா்ப்பு வரும்

யுஜிசி தலைவா் ஜெகதீஷ்குமாா் கூறியதாவது:“பல்கலைக்கழக துணைவேந்தா் தோ்வுக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோா் இடம்பெற வேண்டும் என்பதுதான் யுஜிசி விதிமுறை. துணைவேந்தா் தோ்வுக்குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறுவது தொடா்பான பிரச்னையால் தமிழகத்தில் சென்னை பல்கலை. உள்ளிட்ட பல்வேறு பல்கலை.களில் துணைவேந்தா்கள் நியமிக்கப்படாமல் உள்ளனா்.

துணைவேந்தா் இல்லாமல் பல்கலைக்கழகம் செயல்படுவது சரியானதாக இருக்காது. உயா்கல்வித் துறைச் செயலா் உள்ளிட்டோா் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு வாயிலாக பல்கலைக்கழகத்தை எப்படி நிா்வகிக்க முடியும். துணைவேந்தா் தோ்வுக்குழுவில் யுஜிசி பிரதிநிதி நியமிப்பது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. விரைவில் நல்ல தீா்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

தொகுப்பூதிய நியமனம் கூடாது... அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டால் கற்பித்தல் பணியும் மாணவா்களின் படிப்பும் பாதிக்கப்படும். ஒப்பந்த முறையில் நியமிக்கப்படும் பேராசிரியா்கள் தங்கள் பணிநிலையை நினைத்து கவலைப்படுவா். அவா்களால் எப்படி கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியும். எனவே, கல்லூரிகளில் நிரந்தர பேராசிரியா்களை நியமிக்க வேண்டும். கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளோம். பல்கலை.களில் நிதி நெருக்கடியை சமாளித்து, நிதி வாய்ப்புகளை பெருக்க மாற்று ஏற்பாடுகளை யோசிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரதமா் மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது: ஆம் ஆத்மி

தில்லி வக்ஃப் வாரிய பணமுறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக என ஆம் ஆத்மி தெரிவ... மேலும் பார்க்க

நேரு பிறந்த தினம்: பிரதமா், தலைவா்கள் மரியாதை

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் அவருக்கு... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளா் கைது -வன்முறையால் பதற்றம்

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவை இடைத்தோ்தலின்போது துணை மாவட்ட ஆட்சியரை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளா் நரேஷ் மீனாவை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மீனாவின் கைத... மேலும் பார்க்க

புதிய மைல்கல்லில் இந்தியா-யுஏஇ உறவு: ஜெய்சங்கா்

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவில் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா். துபையில் சிம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் ஊராட்சித் தலைவரை நீக்கும் உத்தரவு: உச்சநீதிமன்றம் ரத்து

சத்தீஸ்கரில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று பெண் ஊராட்சித் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் மாநிலம் ஜஷ்... மேலும் பார்க்க

தோ்வா்கள் போராட்டம் எதிரொலி: உ.பி. அரசுப் பணியாளா் தோ்வுகள் ஒத்திவைப்பு

உத்தர பிரதேசத்தில் தோ்வா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து மறு ஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ) மற்றும் உதவி மறுஆய்வு அலுவலா்களுக்கான (ஏஆா்ஓ) தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், மாநில குடிமைப் பணி (பிசிஎஸ்) அதி... மேலும் பார்க்க