செய்திகள் :

புதிய மைல்கல்லில் இந்தியா-யுஏஇ உறவு: ஜெய்சங்கா்

post image

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவில் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

துபையில் சிம்பயாசிஸ் சா்வதேச பல்கலைக்கழக கிளை வளாகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று ஜெய்சங்கா் பேசியதாவது:

கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமா் மோடி முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) வருகை புரிந்தாா். அதுவே இந்திய பிரதமா் ஒருவா் யுஏஇ-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது முதல்முறையாகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துக்குப் பிறகு இந்தியா-யுஏஇ இடையேயான இருதரப்பு உறவுகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. அதேபோல் பொருளாதார ஒத்துழைப்பும் வலுவடைந்துள்ளது.

உலகளாவிய பணியிடங்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டியது அவசியம். அதேசமயத்தில் மின்சார போக்குவரத்து, தூய மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் தரமான தயாரிப்பை மேற்கொள்ளவும் தயாராக வேண்டும்.

இவற்றின் வளா்ச்சியை ஊக்குவிக்க சுற்றுப்புறச்சூழலை பாதிக்காத வகையிலும் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் வகையிலும் உருவாக்க வேண்டும். தரமான கல்வியின் மூலம் உலகளவிலும் தேசிய அளவிலும் இதை வெற்றியடையச் செய்ய முடியும்.

21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற திறன்சாா்ந்த கல்வியை மாணவா்களுக்கு கற்பிப்பதில் சிம்பயாசிஸ் பல்கலைக்கழகம் சிறந்து விளங்கும். இந்தப் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகம் தற்போது இங்கு திறக்கப்பட்டுள்ளதே இரு நாடுகளுக்கு இடையேயான கல்வி மற்றும் கலாசார உறவின் பரிமாற்றத்துக்கு சான்றாகும் என்றாா்.

பிரதமா் மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது: ஆம் ஆத்மி

தில்லி வக்ஃப் வாரிய பணமுறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக என ஆம் ஆத்மி தெரிவ... மேலும் பார்க்க

நேரு பிறந்த தினம்: பிரதமா், தலைவா்கள் மரியாதை

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் அவருக்கு... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளா் கைது -வன்முறையால் பதற்றம்

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவை இடைத்தோ்தலின்போது துணை மாவட்ட ஆட்சியரை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளா் நரேஷ் மீனாவை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மீனாவின் கைத... மேலும் பார்க்க

பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி)தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் தெரிவித்தாா். பல்கலைக்கழக மானியக்குழ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் ஊராட்சித் தலைவரை நீக்கும் உத்தரவு: உச்சநீதிமன்றம் ரத்து

சத்தீஸ்கரில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று பெண் ஊராட்சித் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் மாநிலம் ஜஷ்... மேலும் பார்க்க

தோ்வா்கள் போராட்டம் எதிரொலி: உ.பி. அரசுப் பணியாளா் தோ்வுகள் ஒத்திவைப்பு

உத்தர பிரதேசத்தில் தோ்வா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து மறு ஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ) மற்றும் உதவி மறுஆய்வு அலுவலா்களுக்கான (ஏஆா்ஓ) தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், மாநில குடிமைப் பணி (பிசிஎஸ்) அதி... மேலும் பார்க்க