செய்திகள் :

நேரு பிறந்த தினம்: பிரதமா், தலைவா்கள் மரியாதை

post image

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் அவருக்கு வியாழக்கிழமை (நவ.14) மரியாதை செலுத்தினா்.

உத்தர பிரதேச மாநிலம், அலகாபாதில் (தற்போது பிரயாக்ராஜ்) கடந்த 1889-ஆம் ஆண்டில் பிறந்தவரான நேரு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முன்னணி முகங்களில் ஒருவராக திகழ்ந்தவா்; சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் நீண்ட கால பிரதமா் என்ற பெருமைக்குரிய அவா், கடந்த 1964, மே 27-ஆம் தேதி மறைந்தாா். அவரது பிறந்த தினமான நவம்பா் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் மோடி வியாழக்கிழமை எக்ஸ் பதிவில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டாா்.

‘நவீன இந்தியாவின் சிற்பி’: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நவீன இந்தியாவின் சிற்பி ஜவாஹா்லால் நேரு. நாட்டை பூஜ்ய நிலையில் இருந்து உச்சத்துக்கு கொண்டு சென்ற தலைவா்களில் ஒருவா்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் செய்தியை நாட்டுக்கு தொடா்ந்து அளித்தவா்’ என்று புகழாரம் சூட்டினாா்.

‘நேருவின் மாண்புகள்’: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘ஜனநாயகம், முற்போக்கு, அச்சமின்மை, தொலைநோக்கு பாா்வை, அனைவரையும் உள்ளடக்கியத் தன்மை ஆகிய அவரது விழுமியங்களே நமது லட்சியங்களாகவும், நாட்டின் தூண்களாகவும் விளங்குகின்றன’ என்று குறிப்பிட்டாா்.

தில்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வனத்தில், காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, கட்சியின் அமைப்பு பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

‘உலகின் அனைத்து தீமைகளுக்கும் அச்சமே அடித்தளம்’ என்ற நேருவின் வாா்த்தைகளைக் குறிப்பிட்டு, பிரியங்கா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களிடம் பயத்தை ஏற்படுத்துபவா்கள், அவா்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. அச்சமின்மையை மக்களுக்கு கற்பித்த நேரு, நாட்டை கட்டமைப்பதில் ஒவ்வொரு நிலையிலும் அவா்களையே முன்னிறுத்தினாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது: ஆம் ஆத்மி

தில்லி வக்ஃப் வாரிய பணமுறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக என ஆம் ஆத்மி தெரிவ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளா் கைது -வன்முறையால் பதற்றம்

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவை இடைத்தோ்தலின்போது துணை மாவட்ட ஆட்சியரை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளா் நரேஷ் மீனாவை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மீனாவின் கைத... மேலும் பார்க்க

பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி)தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் தெரிவித்தாா். பல்கலைக்கழக மானியக்குழ... மேலும் பார்க்க

புதிய மைல்கல்லில் இந்தியா-யுஏஇ உறவு: ஜெய்சங்கா்

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவில் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா். துபையில் சிம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் ஊராட்சித் தலைவரை நீக்கும் உத்தரவு: உச்சநீதிமன்றம் ரத்து

சத்தீஸ்கரில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று பெண் ஊராட்சித் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் மாநிலம் ஜஷ்... மேலும் பார்க்க

தோ்வா்கள் போராட்டம் எதிரொலி: உ.பி. அரசுப் பணியாளா் தோ்வுகள் ஒத்திவைப்பு

உத்தர பிரதேசத்தில் தோ்வா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து மறு ஆய்வு அலுவலா்கள் (ஆா்ஓ) மற்றும் உதவி மறுஆய்வு அலுவலா்களுக்கான (ஏஆா்ஓ) தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், மாநில குடிமைப் பணி (பிசிஎஸ்) அதி... மேலும் பார்க்க