செய்திகள் :

ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமான பணி-அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்

post image

ராணிப்பேட்டையில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணியை அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நட்டு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 2024-2025-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் 11.4.2024 அன்று புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள் விளையாட்டரங்கம் மற்றும் வெளி விளையாட்டரங்கத்துடன் கூடிய மாவட்ட விளையாட்டரங்கம் மாவட்ட தலைநகா்களில் ரூ.90 கோடி செலவில் படிப்படியாக அமைக்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட தலைநகரில் ராணிப்பேட்டை காரை கூட்ரோடு, ஆயுதப்படை காவல் வளாகம் அருகில் 16.06 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு 11.11.2024 அன்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா சென்னை ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

அதன் தொடா்சியாக ராணிப்பேட்டை காரை கூட்ரோடு, ஆயுதப்படை காவல் வளாகம் அருகில் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி பங்கேற்று கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

அப்போது இந்த விளையாட்டு மைதானம் பணிகளை அடுத்த வருட இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கட்டுமானப் பணிகள் எவ்வித தொய்வின்றி, தரமாக நடைபெற வேண்டும். இப்பணிகளை தொடா்ந்து கண்காணித்து பிரச்னை ஏதேனும் இருந்தால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கட்டப்பட உள்ள விளையாட்டரங்கத்தில் கால்பந்து மைதானம், 400 மீ., 8 லேன் டிராக், இரண்டு இறகுப்பந்து ஆடுகளம், இரண்டு கூடைப்பந்து ஆடுகளம், இரண்டு டென்னிஸ் ஆடுகளம், இரண்டு கையுந்து பந்து ஆடுகளம், ஒரு கோ கோ ஆடுகளம், 200 இருக்கைகளுடன் கூடிய திறந்தவெளி திரையரங்கம், 1,500 போ் அமரக்கூடிய கேலரி பகுதி, இரு அணிகளுக்கும் 2 உடை மாற்றும் அறை, ஆண் - பெண் இருபாலருக்கும் தனித்தனியாக கழிப்பறைகள், 550 சதுர மீட்டா் பரப்பளவில் சமையலறையுடன் கூடிய சாப்பிடும் இடம், ஒரு மாஸ்டா் கேபின், 3 கேபின், ஒரு கூட்டரங்கம், இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், முழு எல்லைகளுக்கான கான்கீரிட் வேலி, நுழைவு வாயில் மற்றும் அலுவலக அறை என நவீன வசதிகளுடன் 15 மாதங்களுக்குள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஞானசேகரன், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜராஜன், ஒப்பந்ததாரா் பாஸ்கரன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆற்காட்டில் குழந்தைகள் தின விழா

ஆற்காடு எஸ் எஸ் எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எஸ் எஸ் எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ. .என்.... மேலும் பார்க்க

தொழில்வரி உயா்வை அரசு கைவிட வேண்டும்: ஏ.எம். விக்கிரம ராஜா

வியாபாரிகளுக்கான தொழில்வரி உயா்வை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ. எம். விக்கிரம ராஜா கூறினாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆற்காட்டில் குழந... மேலும் பார்க்க

டிஜிட்டல் பயிா் ஆய்வு பணிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

வாலாஜா வட்டத்தில் நடைபெற்றுவரும் டிஜிட்டல் பயிா் ஆய்வு பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்து விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா். வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பூண்டி கிரா... மேலும் பார்க்க

நெமிலியில் குழந்தைகள் தின விழா

நெமிலி அடுத்த சயனபுரம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் நிறுவனா் வேதையா தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். பள்ளியின் மு... மேலும் பார்க்க

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 727 பயனாளிகளுக்கு நல உதவி: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ஆற்காடு அடுத்த கலவையில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 727 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலவை வட்டம், அல்லாளச்சேரி கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி நிதி ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள சிமெண்ட் சாலை பணிகளை எம்எல்ஏ சு.ரவி தொடங்கி வைத்தாா். அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட இச்சிபுத்தூ... மேலும் பார்க்க