செய்திகள் :

``காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை பறித்துக்கொள்ளும்'' - மும்பை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி

post image

பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த சில நாள்களாக பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். நேற்று மும்பை மற்றும் நவிமும்பை பகுதியில் நடந்த இரு தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மும்பை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி

மும்பை தாதர் சிவாஜிபார்க்கில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி,''பா.ஜ.க கூட்டணி மக்களை சேர்த்து வைப்பது குறித்து பேசுகிறது. ஆனால் காங்கிரஸ் மக்களை பிரிப்பது குறித்து பேசுகிறது. எதிர்க்கட்சிகள் மும்பையில் செயல்படுத்தப்பட்டு வந்த வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிராக இருந்தார்கள். மெட்ரோ ரயில், அடல் சேது கடல் பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். உங்களின் கனவுகள்தான் எங்களின் தீர்மானம் என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். மோடி உங்களின் கனவுகளுடன் வாழ்கிறார்.

அதனை பூர்த்தி செய்து கொடுப்பார். எனவே மகாராஷ்டிராவிற்கு சேவை செய்ய மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். உங்களது கனவுகளை நிறைவேற்ற பா.ஜ.க கூட்டணி அவசியம். எனக்காகவும், மஹாயுதி கூட்டணிக்காகவும் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க இங்கு வந்திருக்கிறேன்.

காங்கிரஸ் இளவரசனிடம் ஒரு முறை பாலாசாஹேப் தாக்கரேயை பாராட்டி பேசச்சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால் அவர்கள்(உத்தவ்) அதில் தோற்றுவிட்டார்கள். கட்சியின் ரிமோட் கண்ட்ரோலை காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்துவிட்டார்கள் (உத்தவ்).

மும்பை மக்கள் நீண்ட காலமாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதனை மும்பை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பாதுகாப்பற்ற முறையில் மும்பை ரயில், பஸ்களில் சென்று வந்தனர். இப்போதும் அதே போலீஸார்தான் இருக்கின்றனர். ஆனால் இன்றைக்கு மோடி வந்த பிறகு எங்காவது வெடிகுண்டு இருக்கும் டிபன் பாக்ஸ், பேக்களை விட்டுவிட்டு சென்றதாக செய்தி வருகிறதா? எதாவது செய்தால் மோடி விடமாட்டார் என்று தீவிரவாதிகளுக்கு தெரியும். உலகின் எந்த மூளையில் இருந்தாலும் பிடித்துவிடுவார் என்று அவர்களுக்கு தெரியும். நவம்பர் 20ம் தேதி மக்கள் திரளாக வந்து வாக்களித்து மஹாயுதி கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யவேண்டும். மஹாயுதி அரசு பதவியேற்க உங்களை அழைப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.

காங்கிரஸ் அரச குடும்பம் தலித்கள், பிற்படுத்தப்பட்ட மக்களை வெறுக்கிறது. அவர்கள் எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள். ஒற்றுமையை சீர்குலைத்து மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சிக்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது இட ஒதுக்கீட்டை பிடுங்கிக்கொள்வார்கள். இட ஒதுக்கீடு நாட்டிற்கு எதிரானது என்று காங்கிரஸ் நம்புகிறது. நீங்கள் ஒற்றுமையாக இருப்பதுதான் உங்களுக்கு பாதுகாப்பு.

நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருப்பதை காங்கிரஸ் கட்சியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் மனநிலை, கொள்கை மாறவில்லை. காங்கிரஸ் இளவரசர் வெளிநாடுகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று வெளிப்படையாக கூறுகிறார். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி அவர்களை பலவீனப்படுத்துகிறது காங்கிரஸ். எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் ரத்து செய்துவிடும். நீங்கள் அவர்களின் வலையில் சிக்கி விடக்கூடாது. அவர்களை புரிந்து கொண்டு ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

தலைமுறை தலைமுறையாக ஏழைகள் மீது அரசியல் கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வதற்காக காங்கிரஸ் வேண்டுமென்றே ஏழைகளை வறுமையில் வைத்திருக்கிறது. ஏழைகளுக்காக நாங்கள் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை, எங்கள் கொள்கைகளை மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் பற்றி கவலைப்படாத இதுபோன்ற சக்திகள் ஆட்சிக்கு வருவதை இந்நாட்டு மக்கள் தடுத்து நிறுத்துவார்கள். மகாயுதி அரசின் லட்ஹி பெஹின் திட்டத்தை காங்கிரஸ் எதிர்த்ததுடன், நீதிமன்றமும் சென்றது.

பல ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் எதிர்காலம் குறித்து திட்டமிடவில்லை. இதன் விளைவாக மும்பை பின்தங்கி தொடங்கியது. காங்கிரஸின் அடையாளம் ஊழல். அது இந்த நாட்டை பின்னோக்கி தள்ளியது மற்றும் முன்னேற்ற பாதையில் தடைகளை உருவாக்கியது'' என்றார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?

சமீபத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளது. பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கும் அந்த அறிக்கையில் தற்போது முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அரசு ஊழ... மேலும் பார்க்க

Nithyananda Secrets : இளமை மருந்து, சர்வதேச நெட்வொர்க் - நித்தியானந்தா மர்மங்கள் | JV Breaks

இன்றைய ஜூவி பிரேக்ஸில்,வெளிநாட்டுக்கு தப்பியோடி கைலாசா என புது நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா . அதே நேரத்தில் பெண்களை சோதனை எலிகளாக பயன்படுத்தவும் மறுபுறம் தமிழ்ந... மேலும் பார்க்க

Delhi : `1 ஓட்டு' வித்தியாசத்தில் மேயரான ஆம் ஆத்மி கவுன்சிலர் - பரபரப்பு தேர்தல்!

டெல்லி மாநகரக மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. ஆம் ஆத்மி தலைவர் மகேஷ் கிஞ்சிக்கும் பாஜக வேட்பாளருக்கும் இடையே நெருக்கடியான போட்டி உருவானது. டெல்லியில் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கை 265. மேயர் பதவியைத் ... மேலும் பார்க்க

US: உளவுத்துறை இயக்குனராக `இந்து பெண்' தேர்வு செய்த ட்ரம்ப்... `துளசி கபார்ட்' பின்புலம் என்ன?

ட்ரம்ப் அரசில் தேசிய புலனாய்வு இயக்குநராக செயல்படவிருக்கிறார் துளசி கபார்ட். இத்தகைய உயர் பதவிக்கு வரும் முதல் இந்து - அமெரிக்கர் துளசிதான்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகையில் துளசியை 'F... மேலும் பார்க்க

இந்தியாவில் முதன்முறை: சிக்கும் ADMK முன்னாள் அமைச்சர்? | DMK | BJP | TVK VIJAY | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Intro: Children's day & Jawaharlal Nehru Birthday * லாட்டரி மார்ட்டினுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!* ஓ.பி.ஜி குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை... 8... மேலும் பார்க்க

Hijab: ஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம்' அமைக்கும் ஈரான் அரசு!

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற அரசின் கட்டுப்பாட்டை பெண்கள் ஏற்க மறுக்கின்றனர். இதற்காக ஹிஜாப் அணியாத பெண்களின் மனநிலையை சரி செய்யப்போவதாக சிகிச்சை மையத்தைத் தொடங்குகிறது ஈரான் அரசு. இஸ்ல... மேலும் பார்க்க