எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
Hijab: ஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம்' அமைக்கும் ஈரான் அரசு!
ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற அரசின் கட்டுப்பாட்டை பெண்கள் ஏற்க மறுக்கின்றனர். இதற்காக ஹிஜாப் அணியாத பெண்களின் மனநிலையை சரி செய்யப்போவதாக சிகிச்சை மையத்தைத் தொடங்குகிறது ஈரான் அரசு.
இஸ்லாமிய குடியரசு நாடான ஈரானில் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றி கொண்டுவரப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பெண்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். ஈரானில் எழுந்த மிகப் பெரிய பெண்கள் போராட்டத்தை வன்முறையுடன் அடக்கியது ஈரான் அரசு. ஆனாலும் பெண்களை அரசு வழி நடத்தும் விதத்துக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.
'Women, Life, Freedom’ 'பெண்கள், வாழ்க்கை, விடுதலை' என்ற அமைப்பு ஈரான் முழுவதும் பரவியிருக்கின்றது. இதன் மூலம் பெண்கள் ஒன்றிணைந்து அவர்களை ஒடுக்கும் சட்டங்களுக்கு எதிராக குரலெழுப்புகின்றனர். அரசு நிர்வாகம் ஆடைக்கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் ஈரானிய பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி ஆடைக்கப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உள்ளாடைகளுடன் வந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகமும் அரசும் அந்தப் பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்று முத்திரை குத்தியது.
பெண்கள் ஹிஜாப் அணிய மறுப்பதை ஈரான் அரசு மனநல பிரச்னையாக சித்தரிப்பதுடன், ‘Clinic for Quitting Hijab Removal' என அதற்கான மருத்துவமனையையும் தொடங்கப்போவதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த மருத்துவமனையில், "ஹிஜாபைத் துறப்பவர்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சை இங்கு வழங்கப்படும். குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மற்றும் இளவயது பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார் பெண்கள் மற்றும் குடும்பத் துறையின் தலைவர் மெஹ்ரி தலேபி தரேஸ்தானி.
பெண்களிடம் கண்ணியம், அடக்கம், கற்பு மற்றும் ஹிஜாப் அணிதலை ஊக்குவிப்பதே இந்த க்ளினிக்கின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் அரசின் நல்லதை வளர்ப்பதற்கும் தீமையை ஒழிப்பதற்குமான அரசு அமைப்பு இந்த க்ளினிக்கின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணியாதவர்கள் (போராட்டக்காரர்கள்) மனநல சிகிச்சை பெறவேண்டியவர்கள் என்கிற ரீதியில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வெட்கக்கேடானது என மனித உரிமை அமைப்புகள் விமர்சிக்கின்றனர்.
அரசின் சித்தாந்தங்களை ஏற்காத பெண்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக பாவித்து சமூகத்திலிருந்து பிரிக்கும் இந்த நவடிக்கை கொடுமையானது என சர்வதேச அமைப்புகள் அச்சம் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb