செய்திகள் :

US: உளவுத்துறை இயக்குனராக `இந்து பெண்' தேர்வு செய்த ட்ரம்ப்... `துளசி கபார்ட்' பின்புலம் என்ன?

post image

ட்ரம்ப் அரசில் தேசிய புலனாய்வு இயக்குநராக செயல்படவிருக்கிறார் துளசி கபார்ட். இத்தகைய உயர் பதவிக்கு வரும் முதல் இந்து - அமெரிக்கர் துளசிதான்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகையில் துளசியை 'Fearless Spirit' எனப் புகழ்ந்தார் ட்ரம்ப்.

43 வயதாகும் துளசி கபார்ட் தனது 21 வயதில் ஹவாய் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அப்போது ஹவாய் பிரதிநிதிகள் சபையில் (சட்டமன்றம்) தேர்ந்தெடுக்கப்பட்ட இளவயது உறுப்பினராகவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினராகும் முதல் இந்து பெண்ணாகவும் சாதனை படைத்தார். அவரது பதவியேற்பிலும் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

துளசி கபார்ட்: ட்ரம்ப் அரசின் பவர்ஃபுல் பொறுப்பில் 'இந்து பெண்'

துளசி என்ற பெயரையும் அவரது சமயத்தையும் வைத்து அவர் ஒரு இந்திய வம்சாவளி என்ற முடிவுக்கு நாம் வரக் கூடும். ஆனால் அது அப்படியில்லை. துளசியின் குடும்பம் அமெரிக்காவில் அரசியல் பின்புலம் கொண்டது. அவரது தந்தை ஹவாய் மாநில செனட்டர் மைக் கபார்ட் மற்றும் அவரது மனைவி கரோல் போர்ட்டர் கபார்ட்.

கரோல் போர்ட்டர் கபார்ட், அமெரிக்காவின் ஹரே கிருஷ்ணா இயக்கம் அல்லது இஸ்கான் இயக்கம் வளர்ச்சியடைந்தபோது இந்துவாக மதம் மாறியவர். அவரது ஐந்து குழந்தைகளுக்கும் நாராயண், விருந்தாவன், பக்தி, துளசி, ஜெய் என இந்து பெயர்களை சூட்டினார்.

தாயின் வழியைப் பின்பற்றி டீன் ஏஜ் முதல் இந்து சமயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் துளசி. 2015ம் ஆண்டு ஆபிரகாம் வில்லியம்ஸ் என்ற திரைப்பட இயக்குநரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணமும் இந்து முறைப்படியே நடைபெற்றது.

2003ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த சில ஆண்டுகள் அமெரிக்க இராணுவ தேசிய காவலர் பிரிவில் பணியாற்றியிருக்கிறார்.

அரசியலில் வளர்ந்த துளசி, 2016ம் ஆண்டு ஜனநாயக கட்சியிலிருந்து குடியரசுக் கட்சிக்கு மாறினார். தற்போது ட்ரம்ப்பின் நம்பிக்கையைப் பெற்று, தேசிய புலனாய்வு இயக்குநர் (National Intelligence Director - DNI) என்ற உயர் பதவியை அடையவிருக்கிறார்.

CIA, NAS, FBI, INR உட்பட அமெரிக்காவின் 18 உளவு ஏஜென்சிகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருப்பவர்தான் தேசிய புலனாய்வு இயக்குர் (DNI).

ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்கும் புதிய அரசின் முக்கிய அங்கமாக செயலாற்றவிருக்கிறார். இதனால் அமெரிக்க வாழ் இந்துக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?

சமீபத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளது. பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கும் அந்த அறிக்கையில் தற்போது முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அரசு ஊழ... மேலும் பார்க்க

Nithyananda Secrets : இளமை மருந்து, சர்வதேச நெட்வொர்க் - நித்தியானந்தா மர்மங்கள் | JV Breaks

இன்றைய ஜூவி பிரேக்ஸில்,வெளிநாட்டுக்கு தப்பியோடி கைலாசா என புது நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா . அதே நேரத்தில் பெண்களை சோதனை எலிகளாக பயன்படுத்தவும் மறுபுறம் தமிழ்ந... மேலும் பார்க்க

Delhi : `1 ஓட்டு' வித்தியாசத்தில் மேயரான ஆம் ஆத்மி கவுன்சிலர் - பரபரப்பு தேர்தல்!

டெல்லி மாநகரக மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. ஆம் ஆத்மி தலைவர் மகேஷ் கிஞ்சிக்கும் பாஜக வேட்பாளருக்கும் இடையே நெருக்கடியான போட்டி உருவானது. டெல்லியில் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கை 265. மேயர் பதவியைத் ... மேலும் பார்க்க

இந்தியாவில் முதன்முறை: சிக்கும் ADMK முன்னாள் அமைச்சர்? | DMK | BJP | TVK VIJAY | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Intro: Children's day & Jawaharlal Nehru Birthday * லாட்டரி மார்ட்டினுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!* ஓ.பி.ஜி குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை... 8... மேலும் பார்க்க

Hijab: ஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம்' அமைக்கும் ஈரான் அரசு!

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற அரசின் கட்டுப்பாட்டை பெண்கள் ஏற்க மறுக்கின்றனர். இதற்காக ஹிஜாப் அணியாத பெண்களின் மனநிலையை சரி செய்யப்போவதாக சிகிச்சை மையத்தைத் தொடங்குகிறது ஈரான் அரசு. இஸ்ல... மேலும் பார்க்க

அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் காலில் விழப்போன நிதிஷ் குமார்... வைரலாகும் வீடியோ!

இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கிறதென்றால், அதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாவத... மேலும் பார்க்க