செய்திகள் :

4 நாள்களுக்குப் பிறகு உயர்ந்த தங்கத்தின் விலை!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களுக்குப் பிறகு இன்று(வெள்ளிக்கிழமை) சற்றே உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் அதிரடியாகக் குறைந்தது. கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 2,720 குறைந்தது.

இதையடுத்து 4 நாள்களுக்குப் பிறகு இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

ஒரு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 55,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 6,945-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடந்த சில நாள்கள் குறைந்தநிலையில் இன்று விலையில் மாற்றமில்லை.

ஒரு கிராம் ரூ. 99-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ அறிவிப்பு!

குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் ந... மேலும் பார்க்க

15,000 பேருக்கு வேலை: காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.மேலும், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் தமிழகம் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக... மேலும் பார்க்க

நாகை - இலங்கை கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தம்!

வானிலை காரணமாக நாகை - இலங்கை கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் (சிவகங்கை) போக்குவரத்து கடந்த ஆக.16-ஆம் தே... மேலும் பார்க்க

தில்லி புதிய மேயராக மகேஷ் குமார் கிச்சி தேர்வு!

தில்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார்.பட்டியலினத்தைச் சேர்ந்த மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நிலையில், மாநகர... மேலும் பார்க்க

புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள்!

சென்னையில் இன்றுமுதல்(நவ. 14) புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஏற்கெனவே சென்னை ர... மேலும் பார்க்க