செய்திகள் :

CT 25: இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்வதில் நீடிக்கும் குழப்பமும்... ஷாகித் அஃப்ரிடியின் விருப்பமும்!

post image

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. இதில், பாதுகாப்பு காரணங்களால் 2008-க்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதைத் தவிர்த்துவரும் இந்திய அணி, இதே காரணத்தைக் கூறி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கூறியிருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான்

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசிடம் ஆலோசனை நடத்தித் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவிருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், இந்திய அணி வராததற்கான காரணங்களைக் கோரி ஐ.சி.சி-க்கு கடிதம் எழுதியிருக்கிறது. இதனால், இந்திய அணிக்காகப் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஐ.சி.சி வேறு நாட்டுக்கு மாற்றுமா அல்லது அங்கு சென்றுதான் ஆக வேண்டும் என்று கூறுமா அல்லது இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்தத் திட்டமிடுமா என்ற சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, ``1970-களின் பிற்பகுதியில் இருந்து கிரிக்கெட் தனது மிகப்பெரிய சவால்களில் ஒன்றை எதிர்கொள்ளக் கூடிய இக்கட்டான சூழலில் இருக்கிறது. இது, வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு விளையாட்டு நம்மை ஒன்றிணைக்க வேண்டிய நேரம். வரலாற்றால் ஒருமுறை பிரிந்த நாடுகள் ஒலிம்பிக்கில் ஒன்றிணையும்போது, கிரிக்கெட்டில் சாம்பியன்ஸ் டிராபியில் நாம் ஏன் இதைச் செய்ய முடியாது?

ஷாகித் அப்ரிடி

இதன் பொறுப்பாளர்களாக ஈகோவை கட்டுக்குள் வைத்திருக்கவும், விளையாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் கிரிக்கெட்டுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். சாம்பியன்ஸ் டிராபிக்காக அனைத்து அணிகளும் பாகிஸ்தானுக்கு வந்து எங்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலை அனுபவித்து, மறக்க முடியாத நினைவுகளுடன் வெளியேறுவதைப் பார்ப்பேன் என நம்புகிறேன்." என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள், "சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் பங்கெடுப்பும், இந்தியா- பாகிஸ்தான் விளையாட்டுப் போட்டிகளும் இல்லாமல் போனால், அது ICC யின் வருமானத்தை பாதிக்கும்" என்கின்றனர்.

இந்திய அணிக்கு, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வேறு நாடுகளில் போட்டியை நடத்துமாறு பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கள் கடைசி வெள்ளை பந்து இருதரப்பு தொடரை 2012-2013 இந்தியாவில் விளையாடிருந்தன என்பது குறிப்பிடதக்கது.

Tim Southee : 'விடை பெறுகிறேன்!' - ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

நியூசிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளரான டிம் சௌத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்... மேலும் பார்க்க

Mohammed Shami: காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்... கம்பேக் மோடில் ஷமி!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றதில் முக்கிய பங்காற்றிய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது ஷமி. வெறும் ஏழு போட்டிகளில் மட... மேலும் பார்க்க

SAvsIND: சதமடித்த திலக் வர்மா; நெருங்கி வந்து தோற்ற தென்னாப்பிரிக்கா! - இந்தியா வென்றது எப்படி?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்திருந்தது. கடைசி வரை த்ரில்லாக சென்ற இந்தப் போட்டியை இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.இந்தி... மேலும் பார்க்க

Sanju Samson: `சஞ்சுவின் 10 வருட கரியரை சீரழித்ததே இந்த 3 கேப்டன்கள்தான்' - தந்தை குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், 2015-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோதும், இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். இதில், கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்ப... மேலும் பார்க்க

SAvIND: `மைதானத்தை சூழ்ந்த பூச்சிகள்'- விநோத காரணத்தால் தடைபட்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்து வரும் மூன்றாவது டி20 போட்டியில் திடீரென பூச்சிகளின் தொல்லை அதிகரித்ததால் போட்டி இடையிலேயே கொஞ்ச நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.SA v Indஇந்திய அணி தென்னாப்பிரிக... மேலும் பார்க்க

IPL: "கோலியும் நானும் இத செய்திருந்தா, 2016-ல் ஆர்சிபி கோப்பை வென்றிருக்கும்..." - கே.எல். ராகுல்

2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.இதற்கான ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு நடைபெற இருக்கும் மெக... மேலும் பார்க்க