செய்திகள் :

SAvIND: `மைதானத்தை சூழ்ந்த பூச்சிகள்'- விநோத காரணத்தால் தடைபட்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி

post image
தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்து வரும் மூன்றாவது டி20 போட்டியில் திடீரென பூச்சிகளின் தொல்லை அதிகரித்ததால் போட்டி இடையிலேயே கொஞ்ச நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
SA v Ind

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இரண்டாம் போட்டியை தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. 1-1 என தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில் மூன்றாவது போட்டி இன்று செஞ்சுரியனில் நடந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 219 ரன்களை அடித்திருந்தது. திலக் வர்மா சதமடித்திருந்தது. தென்னாப்பிரிக்கா 220 ரன்களை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியது. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசி முடிக்க இரண்டாவது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசத் தயாரானார். ஆனால், அதற்குள்ளாகவே ஒளி விளக்குகளை வட்டமிடும் ஈசலை போன்ற பூச்சிகள் மைதானம் முழுவதையும் மொய்க்க தொடங்கின.

அதிகப்படியான பூச்சிகள் மைதானத்தை வட்டமிட்டதால் வீரர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. பூச்சிகள் கொடுத்த தொந்தரவால் போட்டியை தற்காலிமாக நிறுத்த நடுவர் முடிவெடுத்தார். இதனால் இரு அணியின் வீரர்களும் பெவிலியனுக்கு திரும்பினர். இரு அணி வீரர்களும் 15 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த நிலையில் பூச்சிகளின் தொல்லை குறைந்தவுடன் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

SA v Ind

வழக்கமாக மழை பெய்தால் மட்டுமே போட்டிகள் இப்படியாக தற்காலிமாக நிறுத்தப்படும். மழையையும் கடந்து பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை போன்ற காரணங்களுக்காகவும் அரிதாக போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. தேனீக்களின் தொல்லையால் நிறுத்தப்பட்ட போட்டிகளும் இருக்கவே செய்கிறது.

Mohammed Shami: காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்... கம்பேக் மோடில் ஷமி!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றதில் முக்கிய பங்காற்றிய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது ஷமி. வெறும் ஏழு போட்டிகளில் மட... மேலும் பார்க்க

SAvsIND: சதமடித்த திலக் வர்மா; நெருங்கி வந்து தோற்ற தென்னாப்பிரிக்கா! - இந்தியா வென்றது எப்படி?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்திருந்தது. கடைசி வரை த்ரில்லாக சென்ற இந்தப் போட்டியை இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.இந்தி... மேலும் பார்க்க

Sanju Samson: `சஞ்சுவின் 10 வருட கரியரை சீரழித்ததே இந்த 3 கேப்டன்கள்தான்' - தந்தை குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், 2015-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோதும், இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். இதில், கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்ப... மேலும் பார்க்க

IPL: "கோலியும் நானும் இத செய்திருந்தா, 2016-ல் ஆர்சிபி கோப்பை வென்றிருக்கும்..." - கே.எல். ராகுல்

2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.இதற்கான ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு நடைபெற இருக்கும் மெக... மேலும் பார்க்க

IPL Auction 2025: "மஞ்சள் நிற ஜெர்சியையே அணிய விருப்பம்; இல்லையெனில்..." - தீபக் சஹார் ஓப்பன் டாக்!

2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.அடுத்தடுத்த தொடர்களுக்கான வீரர்களின் ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற... மேலும் பார்க்க

CT 25: "நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வந்த விளையாடுவதில்லை?" - ரசிகரிடம் மௌனம் கலைத்த சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி-யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி மாறி, தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா அல்லது வ... மேலும் பார்க்க