செய்திகள் :

Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?

post image

Doctor Vikatan: என் மகனுக்கு 20 வயதாகிறது. அவனுக்கு 10 நாள்களுக்கொரு முறை வாயில் புண்கள் வருகின்றன. என் கணவருக்கும் இதே பிரச்னை இருக்கிறது. வாய்ப்புண் என்பது பரம்பரையாகத் தொடருமா? இதற்கு நிரந்தர தீர்வு என்ன? உடனே சரியாக என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

வாய்ப்புண் பாதிப்பு என்பது பரம்பரையாகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல உங்கள் குடும்பத்தில் பலருக்கும் இந்தப் பிரச்னை வருகிறது என்றால் உங்களுடைய உணவுப்பழக்கத்தை கவனிக்க வேண்டும். சத்துள்ள சாப்பாடு சாப்பிடுகிறார்களா என்று பார்க்க வேண்டும். ஒருவருக்கு மட்டும் தொடர்ந்து பாதிக்கிறது என்றால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஏதோ சத்துக்குறைபாடு இருக்க வாய்ப்பு உண்டு.

உங்களுடைய உணவுப்பழக்கத்தில் கீரைகள், காய்கறிகள், பழங்கள் எந்த அளவுக்கு இடம்பெறுகின்றன என்று பாருங்கள். இளம் வயதினருக்கு வாய்ப்புண் வருவதற்கு சத்துக்குறைபாடுதான் பிரதான காரணமாக இருக்கும். அந்த வயதில் அவர்களுடைய உணவுப்பழக்கம் மோசமாக இருக்கும். அடிக்கடி வெளி உணவுகள், குறிப்பாக அடிக்கடி சாப்பிடும் துரித உணவுகள், பழங்கள், காய்கறிகள் இல்லாத உணவுப்பழக்கம் போன்றவையே காரணமாக இருக்கும். முதியோர்களுக்கும் வயது மூப்பு காரணமாக வாய்ப்புண் வரலாம்.

சித்த மருந்துக் கடைகளில் திரிபலா சூரணம், மருதம்பட்டை சூரணம் மற்றும் அதிமதுர சூரணம் என்று கிடைக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து வாய்க் கொப்பளிக்கலாம். சித்த மருத்துவத்தில் நெல்லிக்காய் லேகியம், வாய்ப்புண்களுக்கான சிறந்த மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. அது வைட்டமின் பற்றாக்குறை காரணமாக வரும் வாய்ப்புண்களைத் தீர்க்கும்.

வாய்க் கொப்பளித்தல்

வாய் சுகாதாரமும்  சரியாகப் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். பல் துலக்கியதும் வாயை முழுமையாக, நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். பேஸ்ட்டின் எச்சம், அதன் காரத்தன்மை காரணமாகவும் வாய்ப்புண்கள் வரலாம்.

உணவுகளில் மணத்தக்காளிக் கீரைக்கு வாய்ப்புண்களை ஆற்றும் தன்மை அதிகம். வாரத்தில் ஒருநாள், இந்தக் கீரையோடு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலே வாய்ப்புண்களைத் தவிர்க்கலாம். புகைப்பழக்கம், புகையிலைப் பழக்கம் இருந்தால் தவிர்க்க வேண்டும். மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்கு முன், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் வாய்க் கொப்பளித்தாலும் சரியாகிவிடும். இவை எதற்குமே குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

`எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்' நோயாளி, முன்னாள் அமைச்சர் விமர்சனம்... மருத்துவ அதிகாரி விளக்கம்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிபாண்டி. இவர் உணவகம் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், காளிபாண்டி டூவீலரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்தில... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு... இரண்டு கைகளிலும் மாறி மாறி வருமா?

Doctor Vikatan:எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பு இடப்பக்கத்தில் ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு வந்தது. இப்போதுதான் அது குறைய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வலது பக்க கையில் அதே வலி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயது சிறுவனுக்கு அடிக்கடி சளி, இருமல்... சித்த மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan: என்10 வயது மகனுக்கு அடிக்கடி சளி, இருமல் வருகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் காட்டி, மாத்திரைகள் கொடுக்கிறோம். ஆனாலும் நிரந்தர தீர்வு இல்லை. சளி, இருமல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan:சமீபத்தில் செய்த ரத்தப் பரிசோதனையில் எனக்கு ப்ரீடயாபட்டிஸ் (pre-diabetes) என்று வந்திருக்கிறது. இதற்கு இப்போதே மருந்துகள் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டுமா? ப்ரீ டயாபட்டிஸுக்கு மருந்துக... மேலும் பார்க்க

Doctor Vikatan: மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?

Doctor Vikatan: கடந்த சில நாள்களாகமுதுகுவலிக்கானமருந்துகள் எடுத்து வருகிறேன். அந்த மருந்துகள் எடுக்க ஆரம்பித்ததும்எனக்கு வாய்ப்புண்கள் அதிகமாகிவிட்டன. மருந்துகளுக்கும் வாய்ப்புண்களுக்கும் தொடர்பு உண்ட... மேலும் பார்க்க