செய்திகள் :

சபரிமலை நடை திறப்பு: ``இது மக்களுக்கு சேவை செய்யும் பணி..'' - போலீஸாருக்கு டிஜிபி அறிவுரை

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறப்பு

மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஐயப்ப சுவாமி கோயில் திருநடையை திறந்து தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து ஆழியில் தீபம் ஏற்றப்படுகிறது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை மற்றும் மாளிகப்புறம் சன்னதி புதிய மேல் சாந்திகள் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சபரிமலை புதிய மேல்சாந்திக்கு மூல மந்திரம் உபதேசிக்கப்படுகிறது.

மண்டலகால பூஜைகளுக்காக தயார் நிலையில் சபரிமலை

நாளை அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி நடை திறந்து பூஜைகளை மேற்கொள்வார். இன்று மாலை நடைதிறப்பதை ஒட்டி பம்பா-வில் இருந்து மதியம் ஒரு மணிக்கு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும் என தேவசம்போர்டும், காவல்துறையும் அறிவித்துள்ளது.

போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம் கேரள டி.ஜி.பி ஷெய்க் தர்வேஷ் தலைமையில் பம்பா ஸ்ரீ ராமசாகிதம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. அதில் பம்பா, சபரிமலை சன்னிதானம், நிலக்கல் பகுதிகளில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

டி.ஜி.பி தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்ட போலீஸ் அதிகாரிகள்

மக்களுக்கு சேவை - டி.ஜி.பி ஷெய்க் தர்வேஷ்

அந்த கூட்டத்தில் டி.ஜி.பி ஷெய்க் தர்வேஷ் கூறுகையில், "மண்டலகால மகரவிளக்கு பூஜைகளின்போது பக்தர்கள் நல்லபடியாக தரிசனம் செய்வதற்கு போலீசார் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். சன்னிதானத்திற்கு செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் சுகமான தரிசனம் நடத்துவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியதே போலீசாரின் முதற்கட்ட பணி. சபரிமலை மண்டல காலத்தில் போலீசார் நியமிக்கப்படுவது வெறுமனே வேலைசெய்வதற்காக மட்டும் அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

கூட்டத்தில் இருந்து வழிதவறி காணாமல் போகக்கூடியவர்களை கண்டுபிடிக்கவும், பிட்பாக்கெட், மொபைல் போன் திருட்டு, போதை பொருட்கள் உபயோகம் போன்றவர்றை தடுக்கும் விதமாகவும் போலீஸார் செயல்பட வேண்டும். முக்கியமான பாதைகளிலும், அனுமதி இல்லாத இடங்களிலும் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது. பணிக்காக நியமிக்கப்படும் போலீசாருக்கு தாமதம் இல்லமல் குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கப்படும்" என்றார்.

சூரியனார் கோயில் மடம்: `திருமண சர்ச்சை; ஆதீனத்தை வெளியேற்றி, பூட்டு போட்ட மக்கள்’ - நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சூரியனார் கோயில் மடம். தமிழகத்தில் உள்ள 18 சைவ மடங்களில் பழைமையான இந்த மடத்திற்கு என சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ச... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்..!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

கார்த்திகை திருநாள்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஒளிர இருக்கும் 3000 மண் விளக்குகள் | Photo Album

கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்... மேலும் பார்க்க

``சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு..." - தேவசம் போர்டு சொல்லும் முக்கிய தகவல்!

18 மணி நேர தரிசனம்சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டலகால பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. இந்த நிலையில் மண்டலகால மகரவிளக்கு பூஜை காலங்களில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள... மேலும் பார்க்க

ஈரோடு: திண்டல்மலை வேலாயுதசுவாமி கோயில் திருக்கல்யாணம்; குவிந்த பக்தர்கள்! | Photo Album

சூரசம்ஹாரம் நிறைவு நாளாக இன்று (நவம்பர் 8) ஈரோடு திண்டல்மலை வேலாயுதசுவாமி திருக்கோயில் முருகன் வள்ளி தெய்வானைக்குத் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழி... மேலும் பார்க்க

`சூரியனார் கோயில் மடத்தின் சொத்துகளை அபகரிக்க ஆதீனம் திருமணம்’ - குற்றச்சாட்டும் ஆதீனத்தின் பதிலும்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் மடம் மிகவும் பழைமையானது. இந்த மடத்தின் ஆதீனமாக 28 வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 10-ம... மேலும் பார்க்க