‘புத்தகத்தை படிப்போம், அறிவுப் பசியை போக்குவோம்’ -அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந...
பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16% உயர்வு!
புதுதில்லி: பால் தயாரிப்பு நிறுவனமான, பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் மாதம் காலாண்டில், 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.29.21 கோடி உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ.25.19 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த வருமானம் ரூ.803.74 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.878.43 கோடியானது.
இதையும் படிக்க: முஃபின் கிரீன் நிகர லாபம் உயர்வு!
1992ல் நிறுவப்பட்ட பராக் மில்க் ஃபுட்ஸ் லிமிடெட் நாட்டின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் உற்பத்தி ஆலைகள் மகாராஷ்டிராவின் மன்சார், ஆந்திரத்தின் பலமனேர் மற்றும் ஹரியானாவின் சோனிபட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.