செய்திகள் :

'1,000 கிலோ அரிசியில் சாதம், 500 கிலோ காய்கறிகள்' - தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் அன்னாபிஷேகம்

post image

தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு பிரதோஷ தினத்தில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்பட்டுவது வழக்கம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதே போல் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

தஞ்சாவூர் பெரிய கோயில்

இந்த நிலையில் ஐப்பசி பெளர்ணமி தினமான இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் அரிசி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை காணிக்கையாக வழங்கினர். தஞ்சாவூர் பெரிய கோயில் மூலவரான பெருவுடையார் என அழைக்கப்படுகிற லிங்கம் 12 அடி உயரம், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. அன்னாபிஷேகத்தில் சாதம் வடித்து பெருவுடையார் திருமேனியில் சாத்துவார்கள்.

இதற்காக கோயில் வளாகத்தில் 1,000 கிலோ பச்சரிசியில் சாதம் வடித்தனர். பின்னர் சாதத்தை பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தினர். இதையடுத்து காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்து அன்னாபிஷேகம் செய்தனர். இதைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதுடன் பெருவுடையாரே என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெருவுடையார் அன்னாபிஷேகம்

இதன் பின்னர் இரவு பெருவுடையாரிமிடரிந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், கால்நடைகளுக்கும், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.

இதே போல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் 40 ஆண்டுகளாக அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள மூலவரான லிங்கம் பதிமூன்றரை அடி உயரமும், ஆவுடையார் 60 அடி சுற்றளவும் கொண்டது. இதற்கு சாத்துவதற்காக 100 மூட்டை அரிசியில் நீராவி கொதிகலன்கள் மூலம் சாதம் வடித்தனர். பின்னர் லிங்கத்திற்கு சாதம் சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். இது குறித்து கோயில் வட்டாரத்தில் கூறுகையில், லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்

அன்னாபிஷேகம் செய்யப்பட்ட லிங்கத்தை தரிசித்தால் கோடிக்கணக்கான லிங்கத்தை தரிசனம் செய்ததற்கான பலன்கள் கிடைப்பதாக ஐதீகம். எனவே தான் சிவாலங்களில் நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது என்றனர். சிறப்பு மிக்க கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் லிங்கத்திற்கு சாத்தப்பட்ட சாதத்தை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். மீதமிருந்த சாதத்தை ஆறு, ஏரி, குளங்களில் மீன்கள் சாப்பிடுவதற்காக போட்டனர். இதற்கான ஏற்பாட்டை காஞ்சி சங்கரமடம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

சபரிமலை நடை திறப்பு: ``இது மக்களுக்கு சேவை செய்யும் பணி..'' - போலீஸாருக்கு டிஜிபி அறிவுரை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறப்புமண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஐயப்ப சுவாமி கோயில் திருநடையை ... மேலும் பார்க்க

சூரியனார் கோயில் மடம்: `திருமண சர்ச்சை; ஆதீனத்தை வெளியேற்றி, பூட்டு போட்ட மக்கள்’ - நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சூரியனார் கோயில் மடம். தமிழகத்தில் உள்ள 18 சைவ மடங்களில் பழைமையான இந்த மடத்திற்கு என சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ச... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்..!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

கார்த்திகை திருநாள்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஒளிர இருக்கும் 3000 மண் விளக்குகள் | Photo Album

கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்... மேலும் பார்க்க

``சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு..." - தேவசம் போர்டு சொல்லும் முக்கிய தகவல்!

18 மணி நேர தரிசனம்சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டலகால பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. இந்த நிலையில் மண்டலகால மகரவிளக்கு பூஜை காலங்களில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள... மேலும் பார்க்க

ஈரோடு: திண்டல்மலை வேலாயுதசுவாமி கோயில் திருக்கல்யாணம்; குவிந்த பக்தர்கள்! | Photo Album

சூரசம்ஹாரம் நிறைவு நாளாக இன்று (நவம்பர் 8) ஈரோடு திண்டல்மலை வேலாயுதசுவாமி திருக்கோயில் முருகன் வள்ளி தெய்வானைக்குத் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழி... மேலும் பார்க்க