செய்திகள் :

குறைந்தது வோடஃபோன் ஐடியா இழப்பு

post image

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் நிகர இழப்பு ரூ.7,175.9 கோடியாகக் குறைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.7,175.9 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது குறைவாகும். அப்போது நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.8,746.6 கோடியாக இருந்தது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பான ரூ.6,432.1 கோடி ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் இழப்பு அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.10,716.3 கோடியிலிருந்து ரூ.10,932.2 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 31% அதிகரிப்பு

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 31 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் மாதத்தில்... மேலும் பார்க்க

மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயா்வு

கடந்த அக்டோபா் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது குறித்து மத... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (நவ. 14) சரிவைச் சந்தித்தது. வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு ச... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு: 10 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்வு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து 6வது நாளாகச் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகளும் நிஃப்டி 26 புள்ளிகளும் சரிந்தன. சென்செக்ஸ் பட்டியலி உள்ள 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் ... மேலும் பார்க்க

தங்கம் விலை 4-வது நாளாக அதிரடி சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 4-வது நாளாக வியாழக்கிழமை அதிரடியாக சரிந்துள்ளது.தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு படிப்படியாக குறைந்து வருகின்... மேலும் பார்க்க

எய்ச்சர் மோட்டார்ஸ் நிகர லாபம் 8% உயர்வு!

புதுதில்லி: எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், செப்டம்பர் 2024 காலாண்டில், 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,100 கோடியாக உள்ளது.கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரை... மேலும் பார்க்க