தில்லியில் தங்கும் விடுதியின் மாடியில் இருந்து விழுந்த 2 மாணவர்கள் பலி
தங்கம் விலை 4-வது நாளாக அதிரடி சரிவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 4-வது நாளாக வியாழக்கிழமை அதிரடியாக சரிந்துள்ளது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு படிப்படியாக குறைந்து வருகின்றது.
இதையும் படிக்க : சர்க்கரை நோய்! கண்டறிவதும் தடுப்பதும் எப்படி?
கடந்த வாரத்தில் ரூ. 58,000-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத் தொடக்கம் முதல் சரிந்து வருகின்றது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,080, புதன்கிழமை ரூ. 320 குறைந்து ரூ. 56,360-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480-க்கும், ஒரு கிராம் ரூ. 6,935-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 2,720 குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை
இதனிடையே, வெள்ளியும் கிராமுக்கு அதிரடியாக இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 99-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 99,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.