செய்திகள் :

ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

post image

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (நவ. 14) சரிவைச் சந்தித்தது.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 2 காசுகள் குறைந்து 84.41 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வணிக நேரத் தொடக்கத்தின்போது 84.40 காசுகள் என்ற அதிகபட்ச சரிவைக் கண்டது.

நிலையான பணவீக்கம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் தொடர் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிவதற்கு காரணங்களாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு

பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 110.64 புள்ளிகள் சரிந்து 77,580.31 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.14 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26.35 புள்ளிகள் சரிந்து 23,532.70 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.11 சதவீதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலி உள்ள 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. மீடியா, ரியாலிட்டி, துறை பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன.

அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் இந்தியா உலகளவில் முதல் இடத்தை பிடிக்கும்!: நிதின் கட்கரி

புதுதில்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆட்டோமொபைல் துறையில் இந்தியா உலகளவில் முதலிடத்திற்கு உயரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.அமேசான் சம்பாவ் உச்சி மாநாட்டில் இன்று கலந்த... மேலும் பார்க்க

தில்லி-பெங்களூரு வழித்தடத்தில் சேவையைத் துவக்கிய இண்டிகோ!

மும்பை: உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ ஜனவரி 10 முதல் புதுதில்லி - பெங்களூரு வழித்தடத்தில் வாடிக்கையாளர்களுக்கு வணிக வகுப்பு சேவையைத் தொடங்குவதாக நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்தது.இண்டிகோ ஸ்ட்ரெச் ... மேலும் பார்க்க

ஏற்றத்திற்கு பிறகு, மீண்டும் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளன்று, இந்திய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தது. அதே வேளையில் ப்ளூ-சிப் பங்குகளான இன்ஃபோசிஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி... மேலும் பார்க்க

ஜனவரி முதல் கியா இந்தியா வாகனங்களின் விலை 2% உயர்வு!

புதுதில்லி : கியா இந்தியா நிறுவனமானது, அதன் அனைத்து மாடல்களின் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 2 சதவிகிதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் இந்க விலை உயர்வானது, பொர... மேலும் பார்க்க

விவசாய ஊழியர்களுக்கான சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் குறைவு!

புதுதில்லி: விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதம் முறையே 6.36 சதவிகிதம் மற்றும் 6.39 சதவிகிதத்திலிருந்து, அக்டோபர் மாதம் முறையே 5.96 சதவிகிதம் ம... மேலும் பார்க்க

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி, மெட்டல் துறை பங்குகள் உயர்வு!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (டிச. 12) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. கடந்த வெள்ளிக்கிழமையும் சரிவுடன் முடிந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது.சென... மேலும் பார்க்க