செய்திகள் :

AusvInd : 'டிஃபன்ஸை மறந்த இந்திய வீரர்கள்' - பெர்த்தில் தடுமாறியதன் பின்னணி என்ன?

post image
பார்டர் கவாஸ்கர் தொடர் இன்று தொடங்கியிருக்கிறது. பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டர்கள் மிக மோசமாக ஆடி சொதப்பியிருக்கின்றனர். வெறும் 150 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆகியிருக்கிறது.
விராட்

இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு நன்றாக ஆடியிருந்தனர். மற்ற அத்தனை வீரர்களுமே சொதப்பல்தான். ஓப்பனிங்கில் இறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பந்துகளுக்கு மட்டுமே தாக்குப்பிடித்தார். ஸ்டம்ப் லைனில் தொடர்ச்சியாக வீசிவிட்டு ஸ்டார்க் கொஞ்சம் வெளியே வீசிய பந்தில் ட்ரைவ் ஆட முயன்று கல்லியில் கேட்ச் ஆனார். முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கிறார். முதல் போட்டியிலேயே இவ்வளவு அவசரமாக ஷாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. நம்பர் 3 யில் தேவ்தத் படிக்கல்லை இறக்கியிருந்தார்கள். 22 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். ஒரே ஒரு பந்தை கூட திடகாத்திரமாக நம்பிக்கையோடு டிபன்ஸ் ஆடவில்லை. ஹேசல்வுட் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

பந்தை லீவ் செய்யும் வித்தையே விராட் கோலிக்கு மறந்துவிட்டதோ என தோன்றும் அளவுக்கு ஒரு எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துக்கு வம்படியாக பேட்டை விட்டு கோலி ஹேசல்வுட்டிடம் அவுட் ஆகியிருந்தார். துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர் எல்லாருமே இதே கதைதான். யாருக்குமே கூராக பந்தை க்ரீஸூக்குள் நிறுத்தும் அளவுக்கு டிபன்ஸ் ஆடவே தெரியவில்லை. பேட்டை விட்டு எட்ஜ் ஆகின்றனர் இல்லை தவறான ஷாட்டை ஆடி அவுட் ஆகின்றனர். கே.எல்.ராகுல் இந்த விஷயத்தில் தேறியிருந்தார். மிக நேர்த்தியாக டிஃபன்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். பேட்டுக்கும் அவரின் இடுப்புக்கும் காந்தத்தால் ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டதைப் போன்று இருந்தது.

கே.எல்.ராகுல்

பேட்டை ஸ்டம்புக்கு வெளியேயே விடாமல் இழுத்துப் பிடித்து கைக்குள் வைத்தே ஆடினார். 50 பந்துகளை எதிர்கொண்ட பிறகுதான் மிக நேர்த்தியாக பேட்டை விட்டு ஒரு ட்ரைவ் ஆடினார். துரதிஷ்டவசமாக அவரால் நீண்ட நேரம் ஆட முடியவில்லை.

பண்ட்டும் நித்திஷ் ரெட்டியும் ஆடியது சாகசமான இன்னிங்ஸ். அவர்களின் இயல்பான ஆட்டமே அதுதான் என்பதால் அவர்களை எந்த கேள்வியும் கேட்க முடியாது.

ஆனால், மற்ற பேட்டர்கள் செய்திருப்பது அநியாயம். உருப்படியாக ஒரு மூன்று பந்துகளை கூட எந்த பேட்டரும் டிஃபன்ஸ் ஆடவில்லை. 5 நாட்கள் நடக்கப்போகும் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் செஷனிலேயே அவ்வளவு அவசரம் என்னவென புரியவில்லை. இல்லை இந்த அணிக்கு தற்காப்பு ஆட்டமே ஆடத் தெரியாதா என்பதுதான் பெரிய கேள்வியாக தொக்கி நிற்கிறது.

'ஆஸ்திரேலிய பௌலர்கள் அத்தனை அற்புதமாக பந்து வீசியதைப் போலெல்லாம் இல்லை. இந்திய வீரர்களிடம்தான் நம்பிக்கையே இல்லை. அவர்கள்தான் சுமாராக ஆடியிருக்கின்றனர்.' என வர்ணனையில் மார்க் நிக்கோலஸ் கூறியிருந்தார். இதுதான் உண்மை. 'இந்திய பேட்டர்கள் அதிகமாக டி20க்களில் ஆடுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு தற்காப்பு ஆட்டம் வரவில்லை. இனி அதில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.' என பயிற்சியாளர் கம்பீர் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டுக்கு முன்பு பேசியிருந்தார். தற்காப்புதான் பிரச்சனை என்பது அணிக்கே தெரிகிறது. ஆனாலும் அதில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து அட்டாக்கிங்காக ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினால் அதற்கான விலையை கொடுத்துதான் ஆக வேண்டும்.

Australia

இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. இன்னும் 2 மாதங்களை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் செலவளிக்க வேண்டும். ஆனால், முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய பின்னடைவு. நிதர்சனத்தை உணர்ந்து மீண்டு வருவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!

AusvInd: 'திணறிய பேட்டர்கள்; காப்பாற்றிய பும்ரா' - பெர்த் டெஸ்ட்டின் முதல் நாள் எப்படியிருந்தது?

கிட்டத்தட்ட ஒரு உலகக்கோப்பைக்கு நிகரான எதிர்பார்ப்புதான் பார்டர் கவாஸ்கர் தொடரின் மீதும் இருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே சமீபமாக சுமாராக ஆடி வருவதால் எந்த அணி தங்களின் ஃபார்மை மீட்டெ... மேலும் பார்க்க

KL Rahul: 'சொதப்பிய 3rd அம்பயர்; ஏமாற்றப்பட்டாரா கே.எல்.ராகுல்?' - என்ன நடந்தது?

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் பெர்த்தில் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 51-4 என திணறி வருகிறது. கொஞ்சம் நன்றாக ஆடிக்கொண்டிருந்த கே... மேலும் பார்க்க

IPL Mega Auction: அண்டர்டாக்ஸை சாம்பியனாக்கிய ஷேன் வார்னே - RR அணிக்குள் எப்படி வந்தார்? IPL Rewind

2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் அது. ஐ.பி.எல் என புதிதாக தொடங்கப்பட்ட லீகில் ராஜஸ்தான் அணி தங்களின் முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து மோதுகிறது. சீசனை வெற்றியோடு தொடங்க நினைத்த ராஜஸ்தானுக்கு பெருத... மேலும் பார்க்க

Asia Cup : `சென்னையில் சர்வதேச கூடைப்பந்து போட்டி; களமிறங்கும் இந்தியா!' - விவரம் என்ன?

ஆசியக்கோப்பை கூடைப்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று சென்னையில் வருகிற 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது. சென்னையில் முதன்முறையாக சர்வதேச ஆண்கள் கூடைப்பந்து போட்டி நடக்கவிருக்கிறது. இதனைத்... மேலும் பார்க்க

Sports Vikatan's Mock Auction : 'சென்னை அணி வாங்கிய அந்த 3 வீரர்கள்!' | Mega Mock Auction Part 2

ஐ.பி.எல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஸ்போர்ட்ஸ் விகடன் சார்பில் ஒரு Mock Auction நிகழ்வை நடத்தியிருந்தோம். ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே முதல் முறையாக 'Mock Auction' என்பதை அறிமுகப்படுத்தி விகடன்... மேலும் பார்க்க

ரஃபேல் நடால்… இது காயங்கள் நிறைந்த காதல் கதை! | Rafael Nadal

நடால் எனும் மாபெரும் சகாப்தம்ரஃபேல் நடால் எனும் மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. டேவிஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றுவிட, ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. இ... மேலும் பார்க்க