செய்திகள் :

`தமிழக அரசு 'அமரன்' படத்துக்கு அதைச் செய்யணும்!’ - முதல்வருக்குக் கடிதம் எழுதிய தயாரிப்பாளர்கள்

post image

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற படம் அமரன். இந்திய ராணுவத்தில் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாகப் பணிபுரிந்து தீவிரவாதிகளுடனான மோதலின் போது உயிரை விட்ட தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக வந்த இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது.

பலதரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறது, முன்னாள், இந்நாள் திரைப்படத் தயாரிப்பாளார்கள் சேர்ந்து உருவாக்கிய 'திரைப்படத் தயாரிப்பாளர்கள் குழு’.

வி.சி.குகநாதன், முக்தா ரவி, ஜெயந்தி கண்ணப்பன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக இருக்கும் இந்தச் சங்கம் 'அமரன்' படத்துக்கு வரிவிலக்குக் கேட்டிருப்பது குறித்து அதன் செயலாளர் ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினோம்.

ஜெயந்தி கண்ணப்பன்

''நாட்டுக்காக வீரமரணம் அடைஞ்சு உயிரைத் தியாகம் செய்த ஒரு வீரரின் வாழ்க்கையைப் பேசியிருக்கு இந்தப்படம். நாட்டுப்பற்றைப் பேசுகிற, தேச நலனை உயர்த்திப் பிடித்துப் பேசுகிற படங்கள் வெளியாகிறப்ப சம்பந்தப்பட்ட படங்களுக்குக் கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து அரசாங்கம் விலக்கு தர்றதுங்கிறது பொதுவா நடக்கிற விஷயம்தான். பாலிவுட்ல 'தங்கல்' முதலான சில படங்களுக்கு இந்த அடிப்படையில் ஏற்கனவே வரிச்சலுகை கொடுக்கப் பட்டிருக்கு.

இந்திய - சீனப் போர் நடந்தப்ப ராணுவ வீரர்களை ஊக்குவிக்கறதுக்காகவே டெல்லி போய் கலை நிகழ்ச்சிகள் நடத்திய வரலாறெல்லாம் தமிழ் சினிமாவுக்கு இருக்கு. அதனாலதான் 'அமரன்' படத்துக்கும் தமிழ் நாடு அரசுகிட்ட இந்தப்  படத்துக்கு வரிவிலக்குத் தரணும்கிற கோரிக்கையை வைச்சு நம்ம முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கோம். இந்த மாதிரியான படங்களை ஊக்குவிக்கிறது சினிமாவுக்கு ரொம்பவே ஆரோக்கியமான ஒரு விஷயம்'' என்கிறார் இவர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Coolie : ``லோகேஷ் கனகராஜ் `Gen Z' கிடையாது; ஆனால்... " - நாகர்ஜுனா

சர்வதேச திரைப்படத் திருவிழா கோவாவில் நவம்பர் 20 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.நடிகர் நாகர்ஜூனாவும் அவரின் மனைவியும் நடிகையுமான அமலாவும் இந்த திரைப்பட திருவிழாவில் பங்கேற்றிருக்கின்றனர். இந்த நிக... மேலும் பார்க்க

பராரி விமர்சனம்: சாதிப் பெருமிதம், ஒடுக்குமுறையின் கோரமுகம் அரசியல் பேசும் பராரி படமாக வென்றதா?

திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜாபாளையம் கிராமத்தில், சாதிப் பிரிவினை நிலவுகிறது. மாறன் (அரிசங்கர்) மற்றும் அவரின் சமூக மக்களும் தினமும் ஊர்த்தெரு ஆட்களால் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.அந்த கிராமத்திலுள்ள... மேலும் பார்க்க

Inbox 2.0 : Eps 15 - அந்த 1500 பேர் எங்கப்பா? | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 15 இப்போது வெளிவந்துள்ளது!முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

Nirangal Moondru Review: 'மேக்கிங் ஓகே; திரைக்கதை?' - கவர்கிறதா சரத்குமார் - அதர்வா காம்போ?

காணாமல் போன தன் காதலியை (அம்மு அபிராமி) தேடிக்கொண்டிருக்கிறான் பள்ளி மாணவன் ஶ்ரீ (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்).மறுபுறம், அப்பெண்ணின் தந்தையும் ஶ்ரீயின் ஆசிரியருமான வசந்த் (ரகுமான்), காவல்நிலையம் சென்று ஆய்வா... மேலும் பார்க்க

Rahman `ரஹ்மான் சார தப்பா பேச எப்படி மனம் வருகிறது? அவர் எனக்குச் சொன்ன அறிவுரை...' - ஏடிகே உருக்கம்

ஏ. ஆர். ரஹ்மானுடனான 29 ஆண்டுக்கால திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தது தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.ரஹ்மானும் இது குறித்து, "ந... மேலும் பார்க்க