செய்திகள் :

`பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துகள்தான் அவை' – ஜெயக்குமாரின் கருத்துக்கு கனிமொழி பதில்!

post image
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், கலைஞர் 100 வினாடி வினா அரை இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்று போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி பேசினார். அவரிடம் 2026 தேர்தலுக்குப் பிறகு 'திமுக-வுக்கு வனவாசம்' என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "அதிமுக-வுக்கு எந்த வேலையும் இல்லாததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல தொடங்கிவிட்டார். பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துகள்தான் அது" என்றார்.

கனிமொழி

தொடர்ந்து பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. நீர்நிலைகள் முழுவதும் ஆழப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்திருக்கிறார். பிறகு, "பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்காமலும், பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளாமலும் இருப்பது வருந்தத்தக்க, கண்டனத்துக்குரியதாக உள்ளது" என்று திமுக எம்.பி., கனிமொழி கூறியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/Neerathikaaram

ஒன் பை டூ

தமிழன் பிரசன்னாதமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க “ `சேக்கிழாரின் ராமாயணம்’ என்று சொன்ன தற்குறிக்கு, ஆலமரத்துக்கும் காளானுக்கும் வித்தியாசம் தெரியாததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அ... மேலும் பார்க்க

அதிமுக-வில் அடிதடி; SEEMAN போடும் புது கணக்கு? | ADANI | MODI | BJP | DMK | STALIN | Imperfect Show

* “ரஷ்யாவைத் தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளை ரஷ்யா தாக்கும்” - அதிபர் புதின் * ரஷ்யாவை எச்சரிக்கும் பிரான்ஸ்? * போர்க்குற்ற விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகக் கைது வாரண்ட் * 44,000 கடந்த காஸா உயி... மேலும் பார்க்க

`நாம் ஒற்றுமையாக இருக்கணும்' - மோதிக்கொண்ட கட்சி நிர்வாகிகள்; அறிவுறுத்திய வேலுமணி - நடந்தது என்ன?

திருநெல்வேலியில் இன்று அதிமுக கள ஆய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். இந்த ... மேலும் பார்க்க

நெல்லை அதிமுக ஆய்வுக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் மோதிக்கொண்ட நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அ.தி.மு.க சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நெல்லை மாவட்ட ஆய்வுக் கூட்டத்தின் பொறுப்பாள... மேலும் பார்க்க