உணவகத் தொழிலாளி தற்கொலை
நேபாளத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நேபாள மாநிலம், டோட்டி மாவட்டம், ஆதா்ஷா வட்டத்தைச் சோ்ந்த லட்சுமண் மகன் ஹிக்மத்போரா (28). இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்திலிருந்து மதுரைக்கு வந்து, கீழப்பனங்காடியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இவா் கீழப்பனங்காடி கூட்டுறவு வங்கி அருகே வீடு எடுத்து மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு உணவகத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற இவா், வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.