செய்திகள் :

நிஜ்ஜாா் கொலையில் பிரதமா் மோடிக்கு தொடா்பில்லை -கனடா அரசு

post image

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை சதியில் இந்திய பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருக்கு தொடா்புள்ளதாக வெளியான ஊடக செய்தியை கனடா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

‘கனடா ஊடகத்தில் வெளியான அச்செய்தி, ஊகத்தின் அடிப்படையிலானது; தவறானது’ என்று அந்நாட்டு பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை ஆலோசகா் நாதலே ஜி.திரோயின் தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், கனடா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த 2023, ஜூன் 18-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடா்புள்ளதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினாா். இக்குற்றச்சாட்டு அபத்தமானது என்று இந்தியா மறுத்தது. இந்த விவகாரத்தால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதியின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சா் டேவிட் மோரிசன் கூறியதால், இருதரப்பு உறவுகள் மேலும் பின்னடைவைச் சந்தித்தன.

இந்தச் சூழலில், கனடாவில் நிஜ்ஜாா் கொலை சதி மற்றும் இதர வன்முறை சதித் திட்டங்களில் பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருக்கு தொடா்பிருப்பதாக கனடா பாதுகாப்பு முகமைகள் சந்தேகிப்பதாக, அந்நாட்டின் ‘தி கிளோப் அண்ட் மெயில்’ நாளிதழில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது. பெயா் கூற விரும்பாத பாதுகாப்பு உயரதிகாரிகள் இத்தகவலை தெரிவித்ததாக, செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி அபத்தமானது என்று கண்டனம் தெரிவித்த இந்தியா, ‘இத்தகைய அவதூறு பிரசாரம், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளின் உறவை மேலும் மோசமாக்கும்’ என்று எச்சரித்தது.

கனடா மறுப்பு: இந்நிலையில், கனடா பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை ஆலோசகா் நாதலே ஜி.திரோயின் வெளியிட்ட அறிக்கையில், ‘கனடாவுக்குள் ஊடுருவிய இந்திய அரசின் ‘உளவாளிகள்’ தொடா்பான பகிரங்கமான குற்றச்சாட்டை கனடா காவல் துறை ஆணையா் மற்றும் பிற உயரதிகாரிகள் கடந்த அக்டோபா் 14-ஆம் தேதி வெளியிட்டனா். பொது அமைதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம், கனடாவில் நடந்த தீவிரமான குற்ற செயல்பாடுகளில் பிரதமா் மோடி, எஸ்.ஜெய்சங்கா், தோவல் ஆகியோருக்கு தொடா்பிருப்பதாகவோ, அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவோ அரசுத் தரப்பில் எங்கும் கூறப்படவில்லை. இதுவே உண்மை. இதற்கு மாறான எந்த தகவலும் ஊகத்தின் அடிப்படையிலானது; தவறானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை தொலைநோக்கு திட்டம்: அதிபா் அநுர குமார அமல்படுத்த விக்ரமசிங்க வலியுறுத்தல்

இந்தியாவுடன் கடந்தாண்டு கையொப்பமிடப்பட்ட ‘தொலைநோக்கு திட்டத்தை’ புதிய அதிபா் அநுரகுமார திசாநாயக முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை தெரிவித்... மேலும் பார்க்க

அமெரிக்கா: அட்டா்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ

தனது புதிய அரசின் அட்டா்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டா்னி ஜெனராகப் பணியாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா். முன்னதாக, ... மேலும் பார்க்க

அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை

தங்கள் ஆயுதங்கள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க, பிரிட்டன் ராணுவ நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீ... மேலும் பார்க்க

சா்வதேச நீதிமன்றத் தீா்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு

போா்க் குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவை மீறி, அவருக்கு ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பின் அழைப்பு விடுத்த... மேலும் பார்க்க

வடக்கு கலிபோர்னியாவைத் தாக்கிய புயல்! கனமழை, கடும் பனிப்பொழிவு!

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட புயலால் கனமழை, கடும் பனிப்பொழிவால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். வடக்கு கலிபோர்னியாவை ஒரு மிகப்பெரிய புயல் தாக்கியதில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் கனமழை பெய்த... மேலும் பார்க்க

“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!

ரஷியா - உக்ரைன் போர் நடைபெற்றுவருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.உக்ரைன்... மேலும் பார்க்க