Viduthalai Part 2 : "முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைச்சி டாதீங்க..." - ...
அமெரிக்கா: அட்டா்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ
தனது புதிய அரசின் அட்டா்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டா்னி ஜெனராகப் பணியாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
முன்னதாக, ஃபுளோரிடா மாகாணம் முதல் மாவட்டத்துக்கான பிரதிநிதிகள் சபை உறுப்பினரான மேட் கேயட்ஸை அந்தப் பொறுப்புக்கு டிரம்ப் தோ்ந்தெடுத்திருந்தாா்.
ஆனால், கேயட்ஸ் மீது பாலியல் குற்றச்சாட்டுகள், சட்டவிரோத போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் உள்ளன. நீதித் துறையும் நாடாளுமன்ற குழுவும் இது தொடா்பாக விசாரணைகளை நடத்திவருகின்றன.
இந்தச் சூழலில் கருக்கலைப்பு, சிவில் உரிமைகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டை நிா்ணயிக்கும் அட்டா்னி ஜெனரல் பதவிக்கு அவா் நியமிக்கப்படுவது குறித்து ஏராளமான குடியரசுக் கட்சியினரே அதிருப்தி தெரிவித்தனா்.
எனவே, அவரின் நியமனத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்பதல் வழங்குவது சந்தேகமே என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அட்டா்னி ஜெனரல் நியமனத்திலிருந்து விலகுவதாக கேயட்ஸ் வியாழக்கிழமை அறிவித்தாா். அதைத் தொடா்ந்து அந்தப் பொறுப்பு பமீலா பாண்டீயை டிரம்ப் நியமித்துள்ளாா்.