செய்திகள் :

சீமென்ஸ் நிகர லாபம் 45% அதிகரிப்பு!

post image

புதுதில்லி: ஜூலை முதல் செப்டம்பா் வரையான காலாண்டில், சீமென்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 45 சதவிகிதம் உயர்ந்து, ரூ.775 கோடி ரூபாயாக உள்ளது.

செப்டம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.534 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே வேளையில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,297 கோடியிலிருந்து 11 சதவிகிதம் உயா்ந்து ரூ.5,894 கோடியானது. புதிய ஆர்டர்கள் 37 சதவிகிதம் அதிகரித்து ரூ.6,164 கோடியானது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.4,498 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.32ஆக முடிவு!

செப்டம்பர் 30, 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில் தலா ரூ.2 மதிப்புள்ள பங்குக்கு ரூ.12 ஈவுத்தொகை வழங்கவும் வாரியம் பரிந்துரைத்தது. இயக்குநர்கள் குழு பரிந்துரைத்தபடி, நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டால், ஈவுத்தொகை 14 பிப்ரவரி 2025 முதலீட்டாளர்களுக்கு வங்கியில் செலுத்தப்படும்.

நிறுவனமானது அக்டோபர் முதல் செப்டம்பர் வரையான நிதியாண்டைப் பின்பற்றுகிறது.

2023-24 நிதியாண்டில், அக்டோபர் 2023 முதல் செப்டம்பர் 2024 வரை அதன் நிகர லாபம் முந்தைய நிதியாண்டில் ரூ.1,911 கோடியிலிருந்து 39 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,665 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாயானது ரூ.17,701 கோடியிலிருந்து 14 சதவிகிதம் அதிகரித்து ரூ.20,250 கோடியானது.

சீமென்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுனில் மாத்தூர் கூறுகையில், நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் அனைத்து நிதி அளவீடுகளிலும் வளர்ச்சியுடன் வலுவான முடிவுகளை வழங்கியுள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.32ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.84.32 ஆக முடிவடைந்தது.அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பேன... மேலும் பார்க்க

தங்கம் விலை 2-வது நாளாக அதிரடி குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது.கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 58,40... மேலும் பார்க்க

காா் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி!

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் காா்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது. அதே நேரம், அந்த நிறுவனத்தின் பயன்பாட்டு வாகன உற்பத்தி 33 சதவீதம் அதிகரித்துள... மேலும் பார்க்க

அதானி குழுமத்தின் 5 நிறுவன பங்குகள் கடும் சரிவு!

அதானி மீதான நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், இந்திய நிறுவனத்தின் நிறுவனர் லஞ்ச குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை அதானி குழும... மேலும் பார்க்க

சோமேட்டோ பங்குகள் 4% உயர்வு!

புதுதில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' பங்குகள், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவிகிதம் உயர்ந்தன.மு... மேலும் பார்க்க

லேவில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைத்த அமர ராஜா இன்ஃப்ரா!

மும்பை: என்டிபிசி லிமிடெட் நிறுவனத்திற்காக லடாக்கின் லே-வில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் கட்டுமானத்தை முடித்துள்ளதாக அமர ராஜா இன்ஃப்ரா தெரிவித்துள்ளது.மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசத... மேலும் பார்க்க