இஸ்ரேல்-லெபனான் இடையே விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம்.!
லெபானானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்பட்டுள்ளார்.
காஸாவில் தொடரும் போரில் பாலஸ்தீன ஹமாஸ் படைக்கு ஆதரவாக, லெபனான் நாட்டிலிருந்தபடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் லெபனான் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அங்கு இதுவரை 3,750-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்; 15,626 போ் காயமடைந்துள்ளனா்.
இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இன்று(நவ. 26) ஆலோசனைக் கூட்டம் நடத்தி, போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.