செய்திகள் :

புதிய புயலுக்கு என்ன பெயர்?

post image

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சின்னம் நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 2 நாள்களில் இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரும். புயல் சின்னம் இலங்கையை நெருங்கும்போதுதான், இது புயலாக மாறுவது தொடர்பாக உறுதியாகக் கூற முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வழக்கம்போல் வங்கக் கடலில் உருவாகும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டப்படுகிறது.

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவிவரும் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவானதும் இதற்கு "ஃபெங்கல்" என்று பெயரிடப்பட உள்ளது.

ஃபெங்கல் என்ற பெயர் சௌதி அரேபியா பரிந்துரைத்த பெயராகும்.

3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், நேற்று (25-11-2024) காலை 08.30 மணி... மேலும் பார்க்க

கொல்லிமலை, அந்தியூர் ஏரி உள்பட மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள்: திறந்துவைத்தார் ஸ்டாலின்

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பார்க்க

கனமழை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆய்வுக் கூட்டம்!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத... மேலும் பார்க்க

மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து: கல்வித்துறை இயக்குநர்

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு, அவர்களது கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்ய பரிந்துரைத்தல் ப... மேலும் பார்க்க

சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும்!

கனமழை எதிரொலியாக சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எதிர்வரும் கனமழையையொட்ட... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த ... மேலும் பார்க்க