Wedding Plan: செலிபிரட்டி ஆடைகளை உங்கள் திருமணத்திற்கு ரீ-கிரியேட் செய்யலாமா?!
IPL 2025: ``ஒரு டீனேஜராக இங்கு வந்தேன்..'' - டெல்லி ரசிகர்களுக்கு ரிஷப் பண்ட்டின் எமோஷனல் நோட்!
IPL 2025: 9 ஆண்டுகள் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கேப்டனாக செயல்பட்ட அவர், ஏன் தக்கவைக்கப்படவில்லை என்ற காரணம் தெரியவில்லை.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு (27 கோடி) எடுக்கப்பட்ட வீரராக கெத்தாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நுழந்திருக்கிறார் ரிஷப் பண்ட். இன்று தனது பழைய அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு குட் பை சொல்லும் விதமாக ஒரு எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார்.
பண்டின் சமூக வலைத்தளங்களில், "டெல்லி கேப்பிடல்ஸ் உடனான எனது பயணத்தில் ஆச்சரியங்களுக்கு குறைவில்லை. மைதானத்தில் இருந்த த்ரில்லும், அதற்கு வெளியே கிடைத்த தருணங்களும், நான் கற்பனை செய்யாத வழியில் வளர்ந்திருக்கிறேன். ஒரு டீனேஜராக இங்கு வந்தேன், கடந்த 9 ஆண்டுகளில் நாம் இணைந்து வளர்ந்திருக்கிறோம்.
இந்த பயணத்தை மதிப்புமிக்கதாக உருவாக்கியது ரசிகர்கள்தான். நீங்கள் என்னை அரவணைத்தீர்கள், எனக்காக ஆராவாரம் செய்தீர்கள் என் வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தில் எனக்காக நின்றீர்கள்.
நான் உங்கள் அன்பையும் ஆதரவையும் என் இதயத்தில் எடுத்துக்கொண்டே செல்கிறேன். நான் மைதானத்தில் இருக்கும்போதெல்லாமே உங்களை எண்டெர்னெயின் செய்ய முயல்வேன். என் குடும்பமாக இருந்து இந்த பயணத்தை சிறப்பான ஒன்றாக மாற்றியதற்கு நன்றி." என குறிப்பிட்டுள்ளார் பண்ட்.
இந்திய அணியில் பேட்ஸ்மேனாகவும், கீப்பராகவும் இருக்கும் பண்ட், ஐபிஎல்லில் மதிப்புமிக்க வீரராக இருக்கிறார். அவரது தலைமை பண்புக்காகவும் ஆக்ரோஷமான விளையாட்டுத் திறனுக்காக பல்லாயிரம் ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
பண்டை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டியது எல்.எஸ்.ஜி அணி. ஆர்.சி.பி, எஸ்.ஆர்.ஹெச் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுடன் ஏலத்தில் போட்டிபோட்டு 27 கோடிக்கு பண்டை தன்வசமாக்கியது எல்.எஸ்.ஜி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...