செய்திகள் :

புதுவை, காரைக்கால்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

புதுச்சேரி, காரைக்கால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாயுள்ளது.

கனமழை எச்சரிக்கையை அடுத்து, நவம்பர் 26(நாளை) அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (26-11-2024) காலை 08.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக,

27-11-2024: புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரக்கோணத்திலிருந்து காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூர்களுக்கு நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்ப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் ப... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வுக் கூட்டம் ரத்து!

விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கள ஆய்வுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மு... மேலும் பார்க்க

புயலாக மாறி, 29ஆம் தேதி வரை கடற்கரையை ஒட்டியே நகரும்: பாலச்சந்திரன்

சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என்றும், இது எப்போது, எங்கே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்படவில்லை எனவும் தென்மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மரபணு மாற்று மக்காச்சோளம் சட்டவிரோதமாக விற்பனை! முதல்வருக்கு கடிதம்

தமிழகத்தில் மரபணு மாற்று மக்காச்சோளம் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு கடிதம் எழுத... மேலும் பார்க்க

3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், நேற்று (25-11-2024) காலை 08.30 மணி... மேலும் பார்க்க