செய்திகள் :

ஏழை சமூகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவி அரசியலமைப்பு! ராகுல் காந்தி

post image

ஏழை சமூகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவியாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தொடக்க நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பு நாளையொட்டி எக்ஸ் தளத்தில் விடியோ பகிர்ந்துள்ள ராகுல் காந்தி தெரிவித்ததாவது:

“அனைவருக்கும் அரசியலமைப்பு நாள் வாழ்த்துகள். நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாகும். ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் வாழ வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாக்க அரசியலமைப்பு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். அரசியலமைப்பு எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக நம் நாடு இருக்கும்.

இந்த நாளில், அரசியலமைப்பு சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும், போராளிகள் மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை மீண்டும் ஏற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அரசியலமைப்பு மூலம் சமூக நீதியை அடைந்துள்ளோம்: குடியரசுத் தலைவர்

இதனிடையே, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அழகுப்படுத்த பல கோடி செலவு: வரலாற்றுச் சிறப்புமிக்க கான்பூர் பாலம் இடிந்து விழுந்தது!

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், வரலாற்றுச் சிறமிப்புமிக்க பாலம் இன்று இடிந்து கங்கை நதியில் விழுந்தது.150 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டதால் சில ஆண்டுகளுக்கு ம... மேலும் பார்க்க

சாக்குப்பையில் பெண்ணின் சடலம்: மும்பையில் பரபரப்பு!

மும்பை-புணே விரைவுச்சாலை அருகே சாக்குப்பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷிர்கான் பாடா பகுதியைத் தூய்மைத் தொழிலாளர்கள் சாலையைச் சுத்தம் செய்யு... மேலும் பார்க்க

ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்! ரூ.3.8 கோடி மோசடி! மக்களே எச்சரிக்கை!!

மும்பை: டிஜிட்டல் கைது என்று கூறி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுவது குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 77 வயது பெண்மணியை ஏமாற்றி, ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைத்து ரூ.3... மேலும் பார்க்க

அமித் ஷா, மோடியின் அடிமைகள் ஷிண்டே, அஜித் பவார்! சஞ்சய் ரெளத்

ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும் அமித் ஷா மற்றும் மோடியின் அடிமைகளாக உள்ளதாக சிவசேனை(உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா... மேலும் பார்க்க

மும்பை 26/11 தாக்குதல்... பலியான வீரர்களுக்கு நினைவஞ்சலி!

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு இன்று தலைவர்களால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதல்மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம... மேலும் பார்க்க

ஹேர் டிரையர் வெடித்த சம்பவத்தில் திடீர் திருப்பம்? விபத்தல்ல கொலை முயற்சி!

பாகல்கோட்: கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியில், ஹேர் டிரையர் வெடித்துச் சிதறியதில், பெண்ணின் கை விரல்கள் துண்டான சம்பவத்தில் திடீர் திருப்பமாக அது விபத்தல்ல என்றும், கொலை முயற்சி என்பதும் தெரியவந்துள்... மேலும் பார்க்க