செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 1,000 மருத்துவப் பணியாளர்கள்!

post image

இஸ்ரேல் காஸாவில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,000 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வரைக் கொல்லப்பட்டதாக காஸா மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலால் கொல்லப்படும் மருத்துவப் பணியாளர்கள்

காஸா மருத்துவத் துறை அலுவலகம் ஞாயிறன்று (நவ. 24) வெளியிட்ட அறிக்கையில், ‘பல மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. 310 க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், பலர் சித்திரவதை மற்றும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளது.

கடந்த அக். 7 ஆம் தேதிக்கு பிறகு 1,000 -க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக மருத்துவத் துறை அறிக்கைக் குறிப்பிடுகிறது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், இஸ்ரேல் ராணுவத்தினரின் பிடியில் இருந்த மருத்துவர் அதான் அல் புர்ஷ் சிறைக்கு அனுப்பப்பட்டப் பிறகு சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. காஸாவில் சிறைபிடித்த பல மருத்துவர்களை இஸ்ரேல் சிறையில் அடைத்து துன்புறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: இஸ்ரேல்-லெபனான் இடையே விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம்.!

அந்த அறிக்கையில் , இஸ்ரேல் காஸா மீது விதித்துள்ள தடையால் அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் நுழைவது தடுக்கப்படுவதால் சுகாதார நெருக்கடி மேலும் மோசமாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு காசாவில் நிலைமையை குறிப்பிட்டு, தொடர்ந்து குண்டுவீச்சுகள், விமானத் தாக்குதல்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மீது நேரடி தாக்குதல்களுக்கு உள்ளான கமால் அத்வான் மருத்துவமனையின் நிலைமையைச் சுட்டிக்காட்டியது.

இஸ்ரேல் இராணுவம், அந்தப் பகுதியின் சுகாதார அமைப்பை சேதப்படுத்துவதில் துரிதமாக இருந்ததாகவும், சமீபத்திய தாக்குதல்களில், கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹுசாம் அபு சாஃபியா மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் குறிப்பிட்டுள்ளது. அவர் ஒரு அறுவை சிகிச்சை முடித்து அறையை விட்டு வெளியேறும்போது வெடிகுண்டு வீசப்பட்டதால் காயமடைந்தார்.

இனப்படுகொலைக்கு துணைநிற்கும் உலகநாடுகள்

’இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள் இந்த இனப்படுகொலைப் போர் குற்றங்களுக்குத் துணையாக இருக்கின்றன.

இஸ்ரேல் தனது போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பேற்று காஸாவில் சுகாதார கட்டமைப்பை அழிக்கும் வேலையைக் கைவிடவேண்டும் என்று சர்வதேச சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் மனிதாபிமானத்திற்கான சட்டத்தின் வீழ்ச்சியை இது குறிக்கும். மேலும், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் மோதல்களுக்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க | உக்ரைனில் ஒரே இரவில் நூற்றுக்கணக்கான டிரோன்களால் தாக்குதல்!

இஸ்ரேலின் சமீபத்திய போர் தாக்குதல்களில் குறைந்தது 44,200 பாலஸ்தீனியர்களைக் கொல்லப்பட்டனர். அதில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகளே.மேலும், காஸாவில் நடக்கும் போர் குறித்து செய்தி சேகரிக்க வந்த 188 செய்தியாளர்களும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து காஸாவில் அகதிகள் முகாம், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், லெபானானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் ஒரே இரவில் நூற்றுக்கணக்கான டிரோன்களால் தாக்குதல்!

கீவ்: உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ. 25) நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் கட்டடங்கள் உள்பட ம... மேலும் பார்க்க

இம்ரான் கான் ஆதரவாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு! பாகிஸ்தானில் பதற்றம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகா் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தும் இம்ரான் கான் ஆதரவாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ... மேலும் பார்க்க

இஸ்ரேல்-லெபனான் இடையே விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம்.!

லெபானானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்பட்டுள்ளார்.காஸாவில் தொடரும் போரில் பாலஸ்தீன ஹமாஸ் படைக்கு ஆதரவாக, லெபனான் நாட்டிலிருந்தபடி இஸ்ரேல் மீது தாக்குதல் ... மேலும் பார்க்க

தடையை மீறி போராட்டம்! இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினா் பேரணி!

பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகா் இஸ்லாமாபாதில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் பேரணியாகச் சென்றனா். முன்னதாக, அடிலாலா சிறையில் இம... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்!

சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞா் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளாா். எக்... மேலும் பார்க்க

ருமேனியா அதிபா் தோ்தல் ரஷிய ஆதரவாளா் அதிா்ச்சி முன்னிலை

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜாா்ஜெஸ்கு எதிா்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தாா். எனினும், தோ்தலில் யாருக்கும் பெர... மேலும் பார்க்க