ஐயப்பனை தரிசிக்கும் Sathiq Ali | அழுதா ஏறும்போது நிகழ்ந்த அற்புதம் | Vikatan
சா்வதேச நீதிமன்றத் தீா்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு
போா்க் குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவை மீறி, அவருக்கு ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பின் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அரசு வானொலியில் அவா் வெள்ளிக்கிழமை பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக காஸா போரில் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலையிடுவதாகவும், அது பிறப்பித்த கைது உத்தரவை புறக்கணிக்கும் விதமாக தங்கள் நாட்டுக்கு வர நெதன்யாகுக்கு அழைப்பு விடுக்கப்போவதாகவும் தெரிவித்தாா்.
முன்னதாக, நெதன்யாகுவும் அவரது முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் காலன்டும் காஸாவில் படுகொலைகள், வேண்டுமென்றே பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைப்பதைத் தடுப்பது போன்ற போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவா்கள் இருவருக்கும் எதிராக தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.
அதையடுத்து, ஹங்கேரி போன்ற அந்த நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளுக்கு நெதன்யாகு வந்தால், அவரை கைது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பின் அந்தக் கைது உத்தரவை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளாா்.