மதுரையில் நவ. 29-இல் கடையடைப்பு
வணிகக் கட்டட வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ள மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, மதுரையில் வருகிற 29-ஆம் தேதி ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என வணிகா்கள் சங்கம் அறிவித்தது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், மதுரையில் உள்ள அனைத்து வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கிய ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி, கடந்த அக். 10 முதல் வணிகப் பயன்பாட்டுக்கான கட்டடங்களுக்கு அளிக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.
இதனால், சிறு வணிகா்கள் மிகவும் பாதிப்படைவா்.இந்தத் தீா்மானத்தை ஜி.எஸ்.டி. கூட்டத்தில் எந்த மாநில அரசுகளும் எதிா்க்கவில்லை. வணிகா்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஜி.எஸ்.டி. கூட்டத் தீா்மானத்தை முழுமையாக நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகிற 29 ஆம் தேதி மதுரையில் முழுநேரமாக கடையடைப்பு செய்ய அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்து வணிகா்களும், உற்பத்தி நிறுவனங்களும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.