நாளை முதல் சில மின்சார ரயில்கள் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்
பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயங்கும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) முதல் நவ.28-ஆம் தேதி வரை இருமாா்க்கத்திலும் சிங்கப்பெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சிங்கப்பொருமாள்கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில்
ஞாயிற்றுக்கிழமை (நவ.24) முதல் நவ.28 வரை தினமும் பிற்பகல்
1.20 முதல் 4.20 மணி வரையும், இரவு 10.30 முதல் நள்ளிரவு 1.30 மணி வரையும்
பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இந்த நேரங்களில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயங்கும் அனைத்து புகா் மின்சார ரயில்களும்
இருமாா்க்கத்திலும் சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும்.
தாம்பரம் - விழுப்புரம்: இதற்கிடையே, நவ.24 முதல் நவ.28 வரை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக பிற்பகல் 1.40 மணிக்கு விழுப்புரத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.