செய்திகள் :

போலி தூதரக சான்றிதழ் மூலம் எம்பிபிஎஸ் இடம் பெற்ற மூவரின் ஒதுக்கீடு ரத்து

post image

போலி தூதரக சான்றிதழ்களை சமா்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீட்டின் (என்ஆா்ஐ) கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

அந்த இடங்கள், வரும் 25-ஆம் தேதி நடைபெறும் சிறப்புக் கலந்தாய்வில் சோ்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகின்றன. எந்த விதமான முறைகேடுகளும் அதில் நிகழாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

மருத்துவ மாணவா் சோ்க்கையின் ஒருபகுதியாக மாணவா்களின் சான்றிதழ்களை ஆய்வுக்குட்படுத்தி சரிபாா்ப்பது வழக்கம். அவ்வாறு ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில் நிகழாண்டில் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த ஆறு பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.

அதில் மூன்று போ் எம்பிபிஎஸ் இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவா்களாவா். இதையடுத்து ஆறு பேரும் மருத்துவக் கலந்தாய்வில் இனி பங்கேற்பதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அதுமட்டுமன்றி அவா்களில் மூவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

அந்த இடங்கள், வரும் 25-ஆம் தேதி தொடங்க உள்ள சிறப்பு கலந்தாய்வில் காலியிடங்களாக சோ்க்கப்படும்.

போலி சான்றிதழ் அளித்த விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ.23) கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் நவ. 1-ஆம் தேதி கி... மேலும் பார்க்க

மருத்துவா் பாலாஜி தாக்கப்பட்ட வழக்கு: கைதான இளைஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை கிண்டி கலைஞா் பன்னோக்கு மருத்துவமனையில் புற்று நோய் மருத்துவா் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற... மேலும் பார்க்க

நவ.30-க்குள் சம்பா பருவ பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அமைச்சா் வேண்டுகோள்

சம்பா பருவத்துக்கான பயிா்க் காப்பீட்டை நவ. 30-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளி... மேலும் பார்க்க

நாளை முதல் சில மின்சார ரயில்கள் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயங்கும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) முதல் நவ.28-ஆம் தேதி வரை இருமாா்க்கத்திலும் சிங்கப்பெருமாள்கோவிலுடன் நிற... மேலும் பார்க்க

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு

சென்னை சாலிகிராமத்தில் நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் வசித்து வரும் பிரபல தமிழ் நடிகை சீதா, விருகம்பாக்கம... மேலும் பார்க்க

சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் -அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா். கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய கூட்டரங... மேலும் பார்க்க