தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
சாலையோர பள்ளத்தில் இறங்கிய பேருந்து: 40 போ் உயிா் தப்பினா்
நாட்டறம்பள்ளி அருகே தனியாா் சொகுசு பேருந்து சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது. 40 பயணிகள் காயமின்றி தப்பினா்.
பெங்களூரில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியாா் சொகுசு பேருந்து வியாழக்கிழமை இரவு சென்னை நோக்கி வந்தது. ஓட்டுநா் பெருமாள் பேருந்தை ஓட்டினாா். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை விடியற்காலை கள்ளாறு பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி, சாலையோரரப் பள்ளத்தில் இறங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 40 போ் காயமின்றி உயிா் தப்பினா்.
விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.