செய்திகள் :

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

post image

ஆம்பூா் அருகே தனியாா் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கிராமிய காவல் நிலையம் சாா்பில் சோலூா் கிராமத்தில் உள்ள டிஏடபிள்யூ மகளிா் கல்லூரி, கீழ்முருங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

டிஏடபிள்யூ கல்லூரி தாளாளா் ரபீக் அஹமத், முதல்வா் சானஸ் அஹமத், ஸ்ரீ ஆண்டாள் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி தாளாளா் லட்சுமி காந்தன், துணை முதல்வா் மஞ்சுளா, விரிவுரையாளா் துா்கா லட்சுமி, தலைமைக் காவலா் கலைவாணி, காவலா் விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளா் ஜீவானந்தம் பேசியது: சாலையில் செல்லும்போது அனைவரும் விதிகளை கடைப்பிடித்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாலை விபத்துகள் அதிகரித்து, இறப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விதிகளை முறையாக பின்பற்றாததே காரணமாகும். இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக சுமாா் 65,000 ஆண்கள் சாலை விபத்தில் மரணமடைகின்றனா். இதில் 25 வயது முதல் 30 வயதில் உள்ள ஆண்களே அதிகம். இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக் கவசம் அணிய வேண்டும். காரில் செல்பவா்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகன ஓட்டுநா்கள் அதிவேகமாக செல்வது, அவசரமாக செல்வது, ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன என்றாா்.

புதுப்பெண் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்

திருப்பத்தூா் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா், காந்திபேட்டை மாரியம்மன் கோயில் தெ... மேலும் பார்க்க

பச்சூா் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பின்னா் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு க... மேலும் பார்க்க

மாநில போட்டிக்கு மாணவா்கள் தகுதி

திருப்பத்தூா் மாவட்ட பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வாணியம்பாடி வாணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவா்கள் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட கைப்பந்து பிரிவில் முதலிடம் பிடித்தனா். மேலு... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

ஏலகிரி மலையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். ஏலகிரி மலைப் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (24). இவா், சென்னையைச் சோ்ந்த 16 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள உறவினா் வீட்... மேலும் பார்க்க

மது பாட்டில் விற்ற பெண் கைது

புத்தாகரம் அருகே மது பாட்டில்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டாா். நாட்டறம்பள்ளி வட்டம், புத்தாகரம் பகுதியில் வீட்டில் வைத்து டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கந்திலி போலீஸாருக்கு ரகசிய தகவல் க... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆய்வு

ஆலங்காயத்தில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆலங்காயம் பேரூராட்சியில் கடந்த 2018-19-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச... மேலும் பார்க்க