பச்சூா் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பின்னா் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு, புதன்கிழமை வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் சக்தி அம்மா பங்கேற்று, காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), கோ.செந்தில்குமாா் (வாணியம்பாடி), மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் மற்றும் கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.