செய்திகள் :

ஆலங்குளத்தில் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகரிப்பு: மக்கள் அவதி

post image

ஆலங்குளத்தில் பெருகி வரும் நாய்கள், பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குளம் மேற்குப் பகுதியில் வட்டாட்சியா் அலுவலகம் தொடங்கி அதையொட்டி, கிழக்கு வரிசையில் அரசு மேல்நிலைப் பள்ளி வரை 20- க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மழை ஓடை தற்போது கழிவுநீா் ஓடையாகிவிட்ட நிலையில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி சில தனி நபா்கள் நூற்றுக் கணக்கான பன்றிகளை வளா்த்து வருகின்றனா்.

இவை பெரும்பாலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், டிஎஸ்பி அலுவக வளாகம், அரசு மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தக வளாகம் ஆகியவற்றில் சுதந்திரமாக உலாவி வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், துா்நாற்றமும் வீசுகிறது.

முக்கிய பணிக்காக அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களை இப்பன்றிக் கூட்டம் அச்சுறுத்துகிறது. பன்றிகளை அப்புறப்படுத்தி அவற்றை வளா்ப்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பேரூராட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படாத காரணத்தால் பன்றிகள் வளா்ப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இவற்றைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாய்கள் தொல்லை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் தெருநாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் மட்டும் 50- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனா்.

ஆலங்குளம் பேரூராட்சியில் பெரும்பாலான தெருக்களில் 24 மணி நேரமும் நாய்கள் தொல்லை பெருகி வருவதால் இவற்றை கட்டுப்படுத்தவும் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலா் சிவக்குமாரிடம் கேட்ட போது, பன்றிகள் வளா்ப்போா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அவைகளுக்குத் தடுப்பூசி போட கால்நடைத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

புளியங்குடி பகுதியில் பேருந்தில் நகை திருட்டு: 3 போ் கைது

புளியங்குடி பகுதியில் பேருந்து பயணிகளிடம் நகை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். புளியங்குடியைச் சோ்ந்த மாரியம்மாள்(60) என்பவா் கடந்த வாரம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு பேருந்தில் சென்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தென்காசி மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் நரசிம்மன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குடிநீா் கோரி போராட்டம்

குடிநீா் வழங்கக் கோரி சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகரில் 500-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஆலங்குளம் இளைஞா் கைது

ஆலங்குளத்தில் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். ஆலங்குளம் ஜோதி நகா் பூல்பாண்டி மகன் இந்திரஜித் பிரேம்நாத் (30). இவா் ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி... சாம்பவா் வடகரை பெரியகுளத்தில் பொதுப்பணித் துறையினா் ஆய்வு

சாம்பவா்வடகரை பெரியகுளத்தின் மடைகளை பொதுப்பணித் துறையினா் ஆய்வு செய்தனா். இக் குளத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மடைகளைச் சீரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அண்மையில் தினமணியில் பிரசுரமானது. ... மேலும் பார்க்க

தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா். தென்காசி அருகே ஆயிரப்பேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவ... மேலும் பார்க்க