அரிட்டாபட்டி: மதுரைக்கு இயற்கை தந்த கொடை... எழில் கொஞ்சும் கிராமம் | Photo Album
தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தென்காசி மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் நரசிம்மன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வா் மருந்தகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் பட்டதாரிகள் இணையதளம் மூலம் நவ. 30 வரை விண்ணப்பிக்கலாம்.
முதல்வா் மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சொத்து வரி, குடிநீா் வரி, மின் இணைப்பு ரசீதுகள், வாடகை இடம் எனில்
வாடகை ஒப்பந்தப்பத்திரம் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
முதல்வா் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும் என்றாா்.